அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விஷால், சூர்யா - முந்தப்போவது யார்?
Thursday, 26 June 2008
 சூர்யா, விஷால் நடித்தப் படங்கள் ஒரேநாளில் வெளியாக இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் கவுதம், சூர்யாவின் 'காக்க காக்க'. அந்தப் படத்தில் பணிபுரிந்தவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'வாரணம் ஆயிரம்'.

சூர்யா இளைஞன், நடுத்தர வயது மனிதன், வயதானவர் என பல்வேறு வயது தோற்றங்களில் இதில் நடித்துள்ளார். பாடி பில்டராக வரும் இளைஞன் வேடத்திற்கு இவர் உடம்பை ஸ்வாஸ்நேகராக செதுக்கியிருப்பது, சூர்யாவின் சின்சியாரிட்டிக்கு சின்ன சாம்பிள்.

வயதான சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரி்த்துள்ள இப்படம் ஆகஸ்ட் பதினைந்து வெளியாகிறது.

அதே நாளில் வெளியாகும் இன்னொரு படம், விஷாலின் 'சத்யம்'. பன்னிரெண்டு கோடி பட்ஜெட் என்பதே மிரட்டுகிறது. அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக விஷால் நடித்திருக்கும் இப்படத்தில் டிவி நிருபராக வரும் நயன்தாரா அவருக்கு ஜோடி. மாணிக்கவேல் ஐபிஎஸ் சாக வரும் கன்னட நடிகர் உபேந்திரா வில்லன். அவர் ஏன் கொலைகாரனாக மாறினார் என்பதற்கு வெயிட்டான பிளாஷ்பேக் வைத்துள்ளார் இயக்குனர், ராஜசேகர்.

கார் சேஸிங், வெளிநாட்டு தொழில் நுட்பக் கலைஞர்கள் என சத்யத்தில் அதிரடிக்கு குறைவில்லை. இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், கேமராவுக்கு ஆர்.டி.ராஜசேகர், சண்டைப்பயிற்சிக்கு கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா என இதிலும் முன்வரிசை கலைஞர்கள் எதிர்பார்ப்பை கிளப்பிவரும் இருபடங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code