அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
உறவினரை மணக்கும் பாரதி
Friday, 27 June 2008
 கனிகா, கோபிகா, மகேஸ்வரி... திருமணமாகி பீல்டை விட்டு வெளியேறும் பட்டியலில் புதிதாக, அம்முவாகிய நான் பாரதி!

பாரதி முன்பே நடிக்க வந்தாலும் தமிழர்களிடம் அவரை கொண்டு சேர்த்த படம், 'அம்முவாகிய நான்'. இதில் அவர் ஏற்று நடித்த பாலியல் தொழிலாளி வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடித்ததால், தாயரிப்பாளர்கள் பணத்துடன் அவரது வீட்டு வாசலில் க்யூ நின்றனர்.

ஆனால், பாரதி நிதானமாக தேர்வு செய்து அகத்தியனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் நடித்தார். விக்ராந்த் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் பாரதிக்கு நல்ல பெயர், நிறைய வாய்ப்புகள் வந்தன.

தற்போது 'சற்றுமுன் கிடைத்த தகவல்' படத்தில் நடித்து வருகிறவர், விஜயகாந்துடன் நடிக்க வந்த, 'எங்கள் ஆசான்' பட வாய்ப்பையும், 'எங்கராசி நல்ல ராசி' பட வாய்ப்பையும் நிராகரித்தார்.

தனது உறவினர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் பாரதி. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என்பது அவரது முடிவு. அதனால்தான், புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

பாரதிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code