அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சந்தியாவின் இரு படங்கள்
Monday, 30 June 2008
 சந்தியா, பிரசன்னா, பாலா நடித்த 'மஞ்சள் வெயில்' ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

ஜூலை மாதம் படம் திரைக்கு வந்து விடும் என்றார் இயக்குனர் ராஜா ஆறுமுகம். இது தவிர சந்தியா நடிக்கும் தமிழ்ப்படம் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்'.

ஷக்தியுடன் நடிக்கும் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' முடியும் தறுவாயில் உள்ளது. இதையடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் சந்தியா. ஒரு படம்  புதுமுகம் பரிமள் நடிப்பது. தமிழ். தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் பெயர் 'ஓடிப்போலாமா'.

ஷக்தி சிதம்பரத்தின் 'ராஜாதி ராஜா' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்கவும் கால்ஷீட் தந்துள்ளார் சந்தியா.

சந்தியா-பரத் நடித்த 'கூடல்நகர்' படத்தை இயக்கிய சீறுராமசாமி அடுத்து ரோஜா கம்பைன்சுக்காக இயக்கப் போகும் படத்திற்கும் சந்தியாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code