அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரபலமாகும் விளம்பர பாடல்
Tuesday, 01 July 2008
 ஹாலிவுட் படங்களில் பாடல்கள் கிடையாது. அதேநேரம், படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பர பாடல்களை அவர்கள் எடு்பபதுண்டு. டைட்டானிக், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்படங்களின் விளம்பரப்பாடல்கள் உலக பிரசித்தம்.

தமிழில் திரைப்படங்களிலேயே பாடல்கள் இருப்பதால் விளம்பர பாடல்களுக்கான தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், இளம் இயக்குனர்கள் விளம்பர பாடல்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வெங்கட் பிரபு தனது 'சரோஜா' படத்துக்காக விளம்பரப்பாடலொன்றை எடுத்துள்ளார். யுவன் சங்கர்ராஜா இதில் பாடி ஆடியுள்ளார்.

ஜூலை 4 வெளியாகும் 'சுப்ரமணியபுரம்' படத்திற்காகவும் படத்தில் இடம்பெறாத விளம்பர பாடலொன்று படமாக்கப்பட்டது.

சரண் இய்ககும 'மோதி விளையாடு' படத்திலும் விளம்பர பாடலொன்றை வைக்க திட்டமிட்டுள்ளார். பாடகர் ஹரிஹரன் தனது நண்பர் லெஸ்ஸி லூயிஸூடன் இணைந்து 'மோதி விளையாடு' படத்துக்கு இசையமைக்கிறார். இவர்கள் இணைந்து 'கலோனியல் கசின்ஸ்' என்ற பெயரில் இசை ஆல்பம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இணைந்து இசையமைக்கும் முதல் திரைப்படம் இது. இதில் இடம்பெறும் விளம்பர பாடலை ஹரிஹரன், லெஸ்ஸி லூயிஸ் இணைந்து பாடுவதோடு, படத்தில் தோன்றவும் செய்கின்றனர். இந்தப் பாடல் காட்சியை மலேசியாவில் எடுக்க திட்டமிட்டுள்ளார் சரண். இதற்காக விரைவில் மலேசியா செல்லவுள்ளார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code