| சென்ற வார உலகம்: 08-07-08 |
| Tuesday, 01 July 2008 | |||||||
பக்கம் 1 / 2
கச்சா எண்ணை விலை குறையாதுகச்சா எண்ணைய் விலை உயர்வுக்கு தீர்வு காண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதி தலைநகரான ஜெட்டாவில் நேற்ற ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் மிகப்பெரிய எண்ணைய் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் சிதம்பரமும் பெட்ரோலிய அமைச்சர் தியொராவும் பங்கேற்றனர். சவுதி பெட்ரோலிய துணை அமைச்சர் இளவரசர் அப்துல்லா அஜீஸ் பின் சல்மான் பேசுகையில் தினமும் இந்த நாடு 76.4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை அதிகரித்து தற்போது 96.5 லட்சம் பேரல் உற்பத்தி செய்கிறது. தேவை அதிகரிக்கிறது என்ற பேச்சே வேண்டாம். அதிக உற்பத்தி செய்து சமாளிப்போம் என்கிறது சவுதி. இந்த மாதிரி அதிக உற்பத்திக்கு காரணமாக யுக வர்த்தகம் இதில் நடக்கக்கூடாது. இந்த விலை உயர்வு கண்டு அக்கறைப்படுவதால் நாங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார். இந்நிலையில் தற்போது பேரல் 135 டாலரிலிருந்து 150 டாலர் வரை எளிதில் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பணவீக்கம் விலைவாசி உயர்வு தொழில் துறை தேக்கம் என அடுத்தடுத்த விளைவுகளால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. -- பயணிகள் கப்பல் மூழ்கி 163 பேர் பலிபிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி புயல் தாக்கியதில் 163 பேர் பலியாயினர். புயலில் சிக்கிய கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 747 பேர் மூழ்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோய்லோ மாகாணத்தை, சூறாவளி புயல் கடந்த வாரம் தாக்கியது. இதனால், மணிலா உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. இலோய்லோ மாகாணத்தில் மட்டும் 80 பேர் புயலுக்கு பலியாகியுள் ளனர். பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. சாலை, ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 17 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மணிலாவிலிருந்து செபு என்ற இடத்துக்கு 626 பயணிகள், 121 ஊழியர்களை ஏற்றிச் சென்ற கப்பல், புயலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கடலில் மூழ்கியது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் இறந்திருப்பர் என அஞ்சப்படுகிறது. உறவினர்கள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். -- ஒபாமா - ஹிலாரி ஒரே மேடையில் பிரச்சாரம்அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் பதவிக்கு கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கும் கறுப்பு இனதம்தவரான பராக் ஒபாமாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ஒபாமா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கேன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கட்சியின் ஒற்றுமை கருதியும் அதிபர் தேர்தலில் கட்சியின் வெற்றியை கருதியும் ஒபாமாவுக்கு முழு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வேற்றுமைகளை மறந்து ஹிலாரியும் ஒபாமாவும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். -- அ.ஒ. விரைவுபடுத்த கோரிக்கை: புஷ்வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் டானா பெரினோ கூறுகையில் அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா முன்னேற்றமான முறையில் செயல்படவேண்டும் என்றும் அப்போதுதான் எங்களாலும் அதில் வேகமாக முன்னேற முடியும். இது மிக மிக முக்கியமான ஒப்பந்தம் என்றார். ஒவ்வொரு நாள் தாமதமும் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நஷ்டமாகும். எனவே தாமதத்தால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் இரு நாடுகளுக்கும் உகந்த ஒப்பந்தமாக இது இருக்கும் என்றார். -- செவ்வாய் கிரகத்தில் மனித வாழமுடியும்செவ்வாய் கிரகத்தின் மண் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளதாகவும் உப்பு கலந்த சுற்றுச்சூழல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது பற்றி உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா பீனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த கிரகத்தில் இறங்கிய பீனிக்ஸ் விண்கலம் சமீபத்தில் தான் பனிக்கட்டிகள் அங்கு இருப்பதை உறுதி செய்தது. மேலும் ரோபோட் கை மூலம் மண் அள்ளப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் செவ்வாய் கிரகத்தின் வட துருவ பகுதியில் உப்பு கலந்த சுற்றுச்சூழல் உள்ளது என்பதும் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஆர்கானிக் கார்பன் சத்து உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.
09-11-2008 12:51 [URL=http://gnpstdqq.com]tjeatwlx[/URL] wxlfdhxy hftljnbj http://feaxzyeg.com utttvpga pwnriamz 09-11-2008 12:52 [URL=http://dxawmors.com]yqtangiw[/URL] dfnsoqpm http://zmiqrgtl.com buopsrpd ilaqzxov cafcptpw 09-11-2008 12:54 [URL=http://rqinxuvf.com]fwzxnvyw[/URL] nnajekvz http://spdpjhbo.com vgpgeaiw kzuhjbfg byiheqqz 09-11-2008 12:56 ijbprqri http://cpmkyciu.com ymmpfgoy hpqghgrk vxokhszu [URL=http://juxfbnld.com]ganmvlcl[/URL] 09-11-2008 12:57 jcltymug [URL=http://jjkdgmsf.com]xxqxgvwv[/URL] tskoasqe http://meuufhfi.com ssjkkqnk xavedfpn |
|||||||




