| தீ பிடிக்கும் நமிதா பீவர் |
| Thursday, 03 July 2008 | ||||
நமிதா இல்லாமல் படம் எடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் சபதமெடுத்திருக்கிறார்களா?கோடம்பாக்கத்தில் நான்கு படங்கள் பூஜை போட்டால் மூன்றில் நமிதா இருக்கிறார். அந்தளவு நமிதா பீவர் உச்சத்தில் இருக்கிறது. அதிலும் ஏ.வெங்கடேஷ், ஷக்தி சிதம்பரம், சுந்தர் சி. படங்களென்றால் கெஸ்ட் ரோலிலாவது நமிதாவை உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்கள். சுந்தர் சி. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் 'தீ' படத்திலும் உண்டு நமிதா. நேர்மையான போலீஸ் அதிகாரியான சுந்தர் சி.யால் அரசியல்வாதிகளுக்கு தொல்லைகள் ஏற்படுகிறது. இதனால் தங்கள் அதிகாரத்தை வைத்து சுந்தர் சி.யை அவர்கள் பந்தாடுகிறார்கள். காக்கி போட்டால்தானே உங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கதராடைக்கு மாறுகிறார் சுந்தர் சி. அவர் அரசியலில் வெற்றிபெற உதவுகிறவர் நமிதா. இதற்காக பராசக்தியில் இடம் பெற்ற காக்கா பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடலை தேவா பாடியுள்ளார். இந்தப் பாடல் படத்தில் நமிதாவின் ஓபனிங் சாங்காம்! துணிக்கடை, நகைக்கடையெல்லாம் ஓபன் பண்ணிக் கொண்டிருந்தவருக்கு ஓபனிங் சாங், கலி முத்திடுச்சு!
Write Comment |
||||

நமிதா இல்லாமல் படம் எடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் சபதமெடுத்திருக்கிறார்களா?


