அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சிம்பு நயன்தாரா மீண்டும் நல்லுறவு
Tuesday, 08 July 2008
 எதிரிகள் நண்பர்களாவதும், நண்பர்கள் எதிரிகளாவதும் அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் சகஜம்தான் என்பதற்கு சிம்பு-நயன்தாரா உதாரணமாகியுள்ளனர்.

ஒருவர் மீது ஒருவர் வசைபாடி ஓய்ந்தபிறகு அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதற்கிடையே நயன்தாராவை சந்திக்க சிம்பு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் சிம்புவும் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். கிழக்கும் மேற்குமாகிப்போன நயன்தாரா-சிம்புவின் காதல் அஸ்தமனமாகிவிட்டதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில், திடீரென இருவரும் மீண்டும் நல்லுறவு கொள்ள தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் சென்னை அண்ணாசாலை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு  நவ்தீப், த்ரிஷா, நயன்தாரா, விஷால் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று சிம்பு அங்கு வந்தார். சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கை தட்டி கரகோஷம் செய்து வரவேற்றனர். நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் புன்னகையுடன் பார்த்தார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை திடீரென்று சிம்பு உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றார். இருவரும் அரை மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வந்தனர். இதனால் இவர்கள் மீண்டும் காதல் வலையில் விழுந்ததாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு எழுந்தது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code