|
Thursday, 10 July 2008 |
ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'குசேலனி'ன் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.
மலையாள ரீ-மேக் என்றாலும் பரபரப்பிற்கும், எதிர்பார்ப்பிற்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ளது 'குசேலன்'. எப்போது பார்க்கலாம் என்ற 'லப்டப்...' ரசிகர்களிடம் அதிகரித்து வரும் நிலையில் இம்மாதம் வெளியாகாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
வியாபார விஷயங்கள் அனைத்தும் முடிவடைந்தாலும், பெட்டி தயாராவதில்தான் தாமதமாகிறதாம். பின்னணி இசை, டைட்டில் போன்ற பணிகள் நடைபெற்றுவருவதால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே படம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராவதால் காலதாமதத்தை தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.
|