|
கமலின் 'மர்மயோகி' டிரைலர் ரெடி
|
|
Saturday, 12 July 2008 |
காதும் காதும் வைத்ததுபோல 'மர்மயோகி' டிரைலரை தயாரித்துள்ளார் கமல்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு நூறுகோடி ரூபாய் பட்ஜெட்டில் 'மர்மயோகி'யை உருவாக்கவுள்ளார் கலைஞானி. விரைவில் இப்படத்தின் தொடக்கவிழா மும்பையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸூடன் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹேமமாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனக்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்திற்கு அமிதாப்பச்சன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கும் கமல் அமிதாப்பிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம்.
இந்நிலையில் படத்தின் டிரைலரை தயாரித்து முடித்துவிட்டாராம் கமல். தனது அலுவலகத்தில் உள்ள ஹோம் தியேட்டரில் சில தினங்களுக்கு முன் நெருங்கிய நண்பர்களுக்கு டிரைலரை போட்டு காட்டியுள்ளார்.
மும்பையில் நடைபெறும் படத்தின் தொடக்கவிழாவில் டிரைலரை திரையிட கமல் முடிவு செய்துள்ளாராம்.
|