| அமெரிக்காவில் குசேலன் கட்-அவுட் |
| Wednesday, 23 July 2008 | ||||
குசேலன்' வருகிற முப்பத்தியொன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.ரஜினி கவுரவ வேடத்தில் தோன்றும் இப்படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் அறுபது கோடிகளுக்க வாங்கியுள்ளது. உலகம் முழுவதற்குமாக ஆயிரத்து இருநூறு பிரிண்டுகள்போட திட்டமிட்டது இந்நிறுவனம். அதிக திரையரங்குகளில் வெளியிட்டால் சில வாரங்களில் கூட்டம் குறைந்துவிடும் என்பதால், குறைவான திரையரங்குகளில் படத்தை திரையிடுமாறு ரஜினி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் படம் நூறு நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட வேண்டுமென விரும்புகிறாராம் அவர். இதன் காரணமாக பிரிண்டுகளின் எண்ணிக்கையை ஐநூறாக குறைக்க முடிவ செய்துள்ளனராம். அமெரிக்காவில் இங்கு வெளியாகும் அதேநாள் 'குசேலன்' வெளியாகிறது. அமெரிக்க விநியோக உரிமையை ஜெயவேல் முருகன் வாங்கியுள்ளார். 'குசேலன்' திரையிடப்படும் திரையரங்குகள் முன் 25 அடி உயர ரஜினியின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர் ஒருவருக்கு அமெரிக்காவில் கட்-அவுட் வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார் ஜெயவேல் முருகன். இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கர்களும் ரஜினியின் ஸ்டைலை ரசிப்பதாகச் சொன்ன அவர், பல அமெரிக்கர்கள், படம் எப்போது வெளியாகிறது என ஆர்வமாக தன்னிடம் விசாரித்ததாகக் கூறினார்.
Write Comment |
||||

குசேலன்' வருகிற முப்பத்தியொன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


