| சென்ற வார உலகம் : 08-12-07 |
| Monday, 10 December 2007 | ||||
உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த சாங் ஜிலின் தேர்வு பீஜிங் : உலக அழகி பட்டம் வென்ற சீனாவைச் சேர்ந்த சாங் ஜிலினுக்கு அந்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள சான்யா நகரில் 1ம் தேதி (சனிக்கிழமை) இரவு உலக அழகி போட்டி நடந்தது. இதில், சீனாவைச் சேர்ந்த 23 வயதான சாங் ஜிலின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கோலாவைச் சேர்ந்த மிகேலா ரெய்சுக்கு இரண்டாவது இடமும், மெக்சிகோவைச் சேர்ந்த கரோலினா கார்டிலோவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. உலக அழகி போட்டியில் சீனா வெற்றி பெற்றது இது தான் முறை. பீஜிங்கில் செக்ரட்டரியாக பணிபுரியும் சாங் ஜிலின், கிஜியாசுவாங் என்ற இடத்தைச் சேர்ந்தவர். சாங் ஜிலின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை வரவேற்று இன்டர்நெட்டில் ரசிகர்கள் பலர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். சீனா டாட்காம் இணையதளத்தில் சாங் ஜிலினுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கோடி ரசிகர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளனர். அழகி போட்டி மற்றும் இதர போட்டிகள் முன்னர், கம்யூ., தலைமையினால் வெறுக்கப்பட்டு வந்தது. ஆனால், சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற போட்டிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. ராணுவம்-புலிகளுக்கிடையே சண்டை : 35 பேர் பலிகொழும்பு : இலங்கையில் தன்னாட்சி கோரி போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தினமும் துப்பாக்கி சண்டை, பீரங்கி தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி ஒரே நாளில் நடந்த தாக்குதல்களில், விடுதலைப்புலிகள் 28 பேரும், ராணுவத்தினர் 7 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.வன்னி பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 10 விடுதலைப்புலிகள் இறந்தனர். நரிகுளத்தில், விடுதலைப்புலிகள் பதுங்கி இருந்த இடத்தை, ராணுவத்தினர் அழித்தனர். இதில், விடுதலைப்புலிகள் 7 பேர் இறந்ததாக, ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முல்லைக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 11 விடுதலைப்புலிகள் இறந்தனர் என்றும் அந்த அதிகாரி கூறினார். வவுனியா-மேடவாச்சியா ரோட்டில் புதைத்து வைத்து இருந்த கண்ணி வெடியில் சிக்கி, ராணுவ வாகனம் வெடித்து சிதறியது. இதில் 3 ராணுவத்தினர் இறந்தனர். வவுனியா அருகே உள்ள சின்ன சிப்பி குளத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில், 4 ராணுவத்தினர் பலியானார்கள். ரக்ய பார்லி தேர்தல் : புடின் கட்சி அமோக வெற்றி மாஸ்கோ : ரக்ய பார்லிமென்ட் தேர்தலில் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரக்ய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை துவங்கியது. இன்று காலை நிலவரப்படி 97.8 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் புடினின் ஐக்கிய ர்ய கட்சி 64.1 சதவிகித வாக்குகளும் கம்யுனிஸ்ட் கட்சி 11..6சதவிகிதம் தேசியவாத சுதந்திர ஜனநாயகக் கட்சி 8.2 சதவிகிதம் மற்றும் ஜஸ்ட் ர்யா கட்சி 7.8 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது. மேலும் இவற்றைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பாராளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான 7 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அவையில் மொத்தமுள்ள 450 இடங்களுக்கு ர்ய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலில் 11 கட்சிகள் போட்டியிட்டன. இதில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் விளாடிமிர் புடினால் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை மக்களாட்சிக்கு விரோதமானது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக இந்தத் தேர்தலில் புடினின் ஐக்கிய ர்ய கட்சி 60 சதவிகித வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் விடுதலை கொழும்பு : இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2184 தமிழர்களில் 1800 பேர் கடந்த நான்காம் தேதி விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை பார்லியில் அரசு தெரிவித்துள்ளது.பார்லிமென்ட் தமிழ் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இலங்கை அரசின் தலைமை கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோ புலி, இதுவரை 1800 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், எஞ்சியோர் விசாரணைக்கு பின் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதனிடையே, இதுபோன்ற பெரும் எண்ணிக்கையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது மக்களுக்கு உரிய விவரங்களை தெரிவிப்பதற்காக உதவி மையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக இலங்கையின் பேரழிவு நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தெரிவித்துள்ளார். தமிழ் தலைவர்களின் மேல்மட்டக் குழு ஒன்று நேற்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியதன் தொடர்ச்சியாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனிடையே, அமைச்சர் சமரசிங்கே, தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த மையங்களுக்கு சென்று அங்கு அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பதை ஆய்வு செய்ததாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. புக்கூடன் புடின் தொலைபேசியில் பேச்சுமாஸ்கோ : ரக்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புக் கடந்த 6ம்தேதி தொலைபேசியில் பேசினார்.ஈரானின் அணு விவகாரம் தொடர்பாக அந்நாட்டு பிரதிநிதியுடன் புடின் பேச்சு நடத்த உள்ள நிலையில், அதிபர் புக் நேற்று புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது ஈரானின் அணு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக புதின் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் ஈரானின் பிரதிநிதி சையத் ஜலிலியுடன் பேசிய புதின், ஈரானின் அணு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், சர்வதேச அணுசக்தி முகமையால் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதற்காக ஈரானுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியர்கள் மீது மலேசியா வழக்குகோலாலம்பூர் : மலேசியாவில் புதிய திருப்பமாக போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட 26 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த மாதம் 25ந் தேதி இந்தியர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள். பேரணியின் மீது மலேசிய போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் பேரணியின் போது காவலர் ஒருவர் மீது இந்தியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி மலேசிய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை இந்தியர்களின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். குற்றம்சாட்டப்பட்டுள்ள 26 பேரும் பேரணியின் போது சட்டவிரோதமாக கூடியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் கடந்த 4ம் தேதி அதிகாலை மலேசிய போலீசார் அவர்களை கைது செய்தனர். டத்தோ சாமிவேலு புகார் கோலாலம்பூர் : இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும், மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் இந்தியர்களை போராட்டத்திற்கு தூண்டி விட்டிருப்பதாக மலேசியா அமைச்சர் டத்தோ சாமிவேலு கடந்த ஏழாம் தேதி குற்றம் சாட்டினார்.மலேசியாவில் இந்தியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக கூறப்படும் புகாரையும் அவர் மறுத்தார். இந்தியாவில் உள்ள சில அமைப்புகள் மலேசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், மலேசியாவில் இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்திய போராட்டத்தின் மூலம் தங்களது முயற்சியில் அந்த அமைப்புகள் வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியர்களின் போராட்டத்தை தூண்டிவிட்ட அமைப்பின் பெயரை டத்தோ சாமிவேலு தெரிவிக்க மறுத்து விட்டார். போராட்டம் நடத்தியவர்கள் பெரும் தொகையை அந்த அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பொருளாதார ரீதியாக இந்தியர்கள் மலேசியாவில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்த அவர், இந்தியர்களின் சராசரி வருமானம் 3,215 வெள்ளிகளாக உள்ளது என்றும், ஆனால் தேசிய அளவில் தனி நபர் வருமானம் 3,022 வெள்ளிகளாக மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார். டிசம்பர் 15ல் அவசரநிலை ரத்து
Write Comment |
||||

பீஜிங் : உலக அழகி பட்டம் வென்ற சீனாவைச் சேர்ந்த சாங் ஜிலினுக்கு அந்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இடையே தினமும் துப்பாக்கி சண்டை, பீரங்கி தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி ஒரே நாளில் நடந்த தாக்குதல்களில், விடுதலைப்புலிகள் 28 பேரும், ராணுவத்தினர் 7 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
மாஸ்கோ : ரக்ய பார்லிமென்ட் தேர்தலில் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரக்ய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
கொழும்பு : இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2184 தமிழர்களில் 1800 பேர் கடந்த நான்காம் தேதி விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை பார்லியில் அரசு தெரிவித்துள்ளது.
தொலைபேசியில் பேசினார்.
அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட 26 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் : இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும், மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் இந்தியர்களை போராட்டத்திற்கு தூண்டி விட்டிருப்பதாக மலேசியா அமைச்சர் டத்தோ சாமிவேலு கடந்த ஏழாம் தேதி குற்றம் சாட்டினார்.
ு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


