அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்றவார உலகம் : 22-12-07
Monday, 24 December 2007
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை நடத்திய வான்வெளித் தாக்குதலில் சிக்கி காயமடைந்தார் என்ற செய்தி கடந்த வாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை தாக்குதல் : பிரபாகரன் காயம்


 கொழும்பு :  இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை புலிகள் மறுத்து வரும் அதே வேளையில், இரண்டு இலங்கை ராணுவம் அத்தகவலை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது.

விடுதலைப் புலிகளின் விமானப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை ராணுவம் அடிக்கடி விமானப்படைத் தாக்குதல் நடத்தி வந்தது. இதில்தான புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், புலிகள் தலைவர் பிரபாகரனை குறிவைத்து இலங்கை ராணுவம்  நடத்திய கடந்த இரண்டு வாரங்களுக்கு முனபு நடத்திய  குண்டு வீச்சில் விடுதலைப் வேலுப்பிள்ளை பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இத்தகவலை அங்கிருந்து வெளியாகும் 'நேஷன்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த மாதம் 28ம் தேதி, இலங்கையின் வடக்கு மாவட்டமான கிளிநொச்சியில் ஜெயந்தினி நகர் அருகில் உள்ள பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கி இருந்தார்.

விமானப்படைக் குண்டு வீச்சில், அந்த பதுங்கு குழியின் ஒரு பகுதி நொறுங்கி அதன் சிதறல்கள் தாக்கி பிரபாகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விடுதலைப் புலிகளின் அவசர சிகிச்சை பிரிவில் பிரபாகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

புலிகள் மறுப்பு :

இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் பிரபாகரனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை புலிகள் அமைப்பு திட்டவட்டமாக ம்றுத்துள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பில், பிரபாகரன் நலமுடன் உள்ளார்.  பத்திரிகை செய்தியில் வெளியானது போன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசு உறுதி :

இலங்கை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 'கடந்த மாதம் 26ம் தேதி பிரபாகரனை குறிவைத்து

கிளிநொச்சியின் ஜெயந்திநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பிரபாகரன் காயத்துடன் உயிர் தப்பியிருப்பது உண்மையே', என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் மீதான வழக்கு வாபஸ்


சிங்கப்பூர் :  மலேசியாவில் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்தியார்கள் மீதான வழக்குகளை  திரும்பப் பெறுவதாக மலேசிய அரசு இன்று அறிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த மாதம் 25ந் தேதி இந்தியர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள். பேரணியின் மீது  மலேசிய போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் பேரணியின் போது காவலர் ஒருவர் மீது இந்தியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி மலேசிய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 31 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 5 பேர்  மீதான அனைத்து வழக்குகளையும் கைவிடுவதாகவும், எஞ்சிய 26 பேர் மீதான கொலை முயற்சி வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்தே இந்தியர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை மலேசியா வாபஸ் பெற்றுக் கொண்டது.

இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் குறைந்தது 5 ஆண்டு சிறை உட்பட கடும் தண்டனையை அனுபவிக்க  வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் படுகொலை : குற்றவாளிகள் வரைபடம் வெளியீடு


 ஹூஸ்டன் : அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் கடந்த வாரம் இந்திய மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலததைச் சேர்ந்த சந்திரசேகர ரெட்டி கோமா(31),கிரண் குமார் ஆலம்(33) ஆகிய இருவர் அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் உள்ள 'எல்எஸ்' பல்கலைக்கழகத்தில் இருவரும் வேதியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தனர். ஆலம் என்பவர் ஐதராபாத் மாநிலத்திலும், கோமா குர்னூல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்.

கடந்த 13ம் தேதி இவர்கள் இருவரும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.

இருவரின் சடலங்களும் நேற்று(திங்கள் கிழமை) பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், கோமா மற்றும் கிரண் குமார் தங்கியிருந்த குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் குறித்த உருவ படங்களை உத்தேசமாக வரைந்து வெளியிட்டுள்ளனர்.

நான்கு அல்லது ஐந்து பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதில் இரண்டு பேரின் உருவ படங்களுக்கான தகவல்கள் மட்டுமே கிடைத்தது என்றும், அதனடிப்படையில் இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பயணிகள் தடம் புரண்டு 50 பேர் பலி


மிர்பூர்காஸ் : பாகிஸ்தானில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டு 50 பேர் பலியானார்கள், பலர் காயமடைந்தனர்.

காராச்சியில் இருந்து லாகூருக்குச் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகள் நெரிசல் ஏராளமாக இருந்தது.

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பயணிகள் ஏராளமானோர் இந்த ரயிலில் வந்து கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சிந்து மாகாணம் மெஹ்ராபூர் என்ற இடத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென தடம்புரண்டது. இதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன.

அதிகாலை வேளை என்பதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால், விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாகத் தப்ப முடியவில்லை. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாயினர். பலர் காயமடைந்துள்ளனர.  சம்பவ இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆஸி வழக்கு : ஹனீப்புக்கு வெற்றி


பிரிஸ்பேன் :   ஆஸ்திரேலிய மருத்துவமனையில் பணி புரிய மீண்டும் விசா வழங்கவேண்டும், என ஆஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு பெடரல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஹனீப் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் திரும்பப்பெற்றதை அடுத்து, அவரை நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு அனுமதியளித்திருந்தது.

அதேநேரத்தில், அவர் மீண்டும் தனது பணியை ஆஸ்திரேலிய மருத்துவமனையில் தொடர்வதற்கான விசா வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரியூஸ் தாக்கல் செய்த அம்மனுவை, ஆஸ்திரேலிய பெடரல் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரிட்டனின் கிளாஸ்கோ மற்றும் லண்டன் விமான நிலையத்தில் கார்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் முகமது ஹனீஃபை கடந்த ஜூலை 2 அன்று அந்நாட்டின் தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து, தீவிரவாத அமைப்புக்கு ஆதவரவளித்தது, இந்த வழக்கில் தொடர்புடைய சபீல் அகமதுவுக்கு செல்பேசி சிம் கார்டு கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால், ஹனீஃப் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டு, நாடு திரும்ப அனுமதியளிக்கப்பட்டது.

பாக் மசூதியில் குண்டு வெடித்து 54 பேர் பலி


 பெஷாவர் :  பாகிஸ்தானின்  மசூதிக்குள் பக்ரீத் தொழுகை நடந்து கொண்டிருந்த போது தற்கொலைபடை தாக்குதல் நடைபெற்றது. இதில் 54 பேர் உடல் சிதறி பலி யானார்கள்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தலிபான் ஆதரவு தீவிரவாதிகள் நட வடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்ரீத் தினமான இன்று முன்னாள் அமைச்சர் அப்தாப் அகமதுகான் ஷெர்பாவின் சொந்த நகரமான சர்சதாவில் உள்ள ஈத் உல் ஜூகா மசூதியில் பக்ரீத் தொழுகை நடந்து கொண்டிருந்தது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன்  குண்டு வெடித்தது.

இதில், சம்பவ இடத்திலேய 54 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அமைச்சர் ஷெர்பாவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் ஷெபாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து அமைச்சர் கூறும் போது, இச்சம்பவத்தில் எனது மகனும், உறவினரும் காயமடைந்தனர், என்றார்.  இதனை தற்கொலைப் படைத்தாக்குதல்தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் அமைச்சர் ஷெர்பாவை குறிவைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பது
குறிப்பிடத்தக்கது. முதல் தாக்குதல் கடந்த ஏப்ரல் 28ல் ஷெர்பாவை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் 28பேர் பலியானார்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code