|
மும்பை பெண்கள் மானபங்கம்: 7 பேர் கைது
|
|
Wednesday, 02 January 2008 |
|
மும்பை : புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு பெண்கள் 70 முதல் 80 பேர் முன்னிலையில் மான்பங்கப்படுத்தப்பட்டனர். இந்த வவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில்தான்.
நவீன நாகரிகத்தின் ஜீவநதியான மும்பை கொஞ்சம் கொஞ்சமாக தலைந்கர் டில்லியைப் போல் மாறிக் கொண்டிருக்கிறதோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
சம்பவம் நடந்து முழுதாக ஒருநாள் கடந்து விட்ட நிலையில் வழக்கே பதிவு செய்யப்படவில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற செய்தி நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
மும்பையின் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படும் ஜூகு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திங்கள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இளம் காதலர்கள் ஜோடியாக நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மது அருந்திய இளைஞர்களும் இந்த் நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த அவமானகரமான சோகம் அங்கே அரங்கேறிவிட்டது.
ஓட்டல் வாசலில் இருந்து 100 மீ இடைவெளி கூட இல்லாத மக்கள் நடமாட்டம அதிகமுள்ள ஜூகு பகுதியில் சுமார் 70 முதல் 80 பேர் வரையிலான இளைஞர்கள் போதை தலைக்கேறி ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இரண்டு ஜோடிகள் சிக்கிக் கொண்டனர்.
ஆண் நண்பர்களுடன் வந்திருந்த அந்த இரண்டு பெண்களிடம் கூடியிருந்தவர்கள் காமவெறியுடன் மோதினர். இதனால், பெண்களுடன் வந்திருந்த ஆண் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கூட்டத்தினர், போதையில் அப்பெண்களின் ஆடைகளைத் கிழித்து அவர்களிடம் காம இச்சையுடன் நடக்க முயற்சித்தனர்.
இதனால், அப்பெண்கள் செய்வதறியாது, உதவியுமின்றி தவித்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 'தி இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் அருகில் இருந்த போக்குவரத்து காவர்களிடம் விஷயத்தை விவரிக்க சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து நிலைமையைச் சமாளித்தனர். அவமானத்தால் கூனிக்குறுகிய அப்பெண்கள் மனமுடைந்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க மறுத்து விட்டனர்.
இதனால், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியாமலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமலும் போலீசார் தவித்து வந்த போலீசார், நாளிதழ்களில் வெளியான புகைப்படங்களை வைத்து இதுவரை ஏழு வாலிபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகளைத் தேடும் படலம் மும்பை நகர் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
|