| சென்ற வார உலகம் : 05-01-07 |
| Saturday, 05 January 2008 | ||||
பெனாசிர் கொலை : விசாரணையைத் துவக்கினர் ஸ்காட்லாந்து யார்டு போலீசார்இஸ்லாமாபாத் : படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் வழக்கை விசாரிக்க அந்நாட்டிற்கு வந்துள்ள ஸ்காட்லாந்து போலீசார் தங்களது விசாரணையை இன்று(சனிக்கிழமை) துவக்கினர்.பெனாசிர் பூட்டோ, கடந்த மாதம் 27ம் தேதி ராவல்பிண்டியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா இல்லை, தற்கொலைப் படைத் தாக்குதலில் சிக்கி இறந்தாரா என்பது குறித்து சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், பெனாசிர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிபர் முஷாரப் அரசின் திட்டமிட்ட சதி என பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஸ்காட்லாந்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உலக நாடுகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அதிபர் முஷாரப் பின்னர் சம்மதம் தெரிவித்தார்.இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க ஸ்காட்லாந்துயார்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட போலீஸ் குழு பாகிஸ்தான் வந்தது. இந்தக் குழு சனிக்கிழமை தங்களது விசாரணையைத் துவக்கியுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கில் பெனாசிரின் உதவியாளருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பெனாசிர் கொல்லப்படுவதற்கு முன் அவரது மேடையில் இருந்து கொலையாளிகளுக்கு விநோத சமிக் ஷையளித்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், பெனாசிரின் இறுதிச் சடங்கில் உதவியாளர் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தாலோ அல்லது, அவர்கள் பற்றி துப்பு கொடுத்தாலோ அவர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசாக வழங்கப்படும், என பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது. பெனாசிர் கட்சித் தலைவரானார் பிலாவால் லர்கானா : மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவரது 19வயது மகன் பிலாவால் பூட்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடக்க இருக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.பெனாசிரின் மறைவைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்த குழப்பம் கட்சியில் நீடித்தது. இந்நிலையில், பெனாசிரின் மூத்த மகன் சுவே பிலாவால் பூட்டோ கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சட்டதிட்டப்படி, தலைவராக வருபவர்களுக்கு 22 வயது நிரம்பியிருக்க வேண்டும். எனினும் 19 வயதே ஆகும் பிலாவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பெனாசிர் கொலை விவகாரத்தில் எதுவும் மறைக்கப்படவில்லை. விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,' என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா தெரிவி த்துள்ளார். அமைதி பேச்சு ரத்து : இலங்கையில் பதற்றம்கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நார்வே அமைதிக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால், இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது. ![]() இலங்கையில் அமைதி திரும்புவதற்கும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கும் நார்வே தூதுக்குழு முயன்று வந்தது. இதன் பலனாக, 2002ம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை தொடர்ந்து வந்தாலும், இருதரப்பிலும் நெருக்கமான பேச்சுவார்த்தையை நார்வே அமைதிக் குழு தொடர முயற்சி மேற்கொண்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2006ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, இருதரப்பினரில் யாராவது ஒரு தரப்பினர் அழைக்காமல் அமைதி முயற்சியில் ஈடுபடப் போவது இல்லை என்று நார்வே அரசு அறிவித்தது. சமீப காலமாக புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கத் துவங்கியது. விடுதலைப் புலிகளின் முகாம் கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. புலிகளின் முக்கிய தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகள் ஆக்கிரமித்திருந்த இடங்களை ராணுவம் கைப்பற்றியது. இப்படி உள்நாட்டு சண்டையில் இலங்கை ராணுவம் தொடர் வெற்றி பெற்று வருவதைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு நார்வே வருத்தம் தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதால், புலிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவார்கள் என்ற அச்சத்தில் தரைப்படை, விமானப்படை, மற்றும் கப்பல் படையை ராணுவம் உஷார்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தற்கொலைப் படைத்தாக்குதல்களை முடுக்கிவிட புலிகள் நாட்டிற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் இலங்கையில் உச்சகட்ட பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. கொழும்புவில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி கொழும்பு : இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நான்குபேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.கொழும்புவின் மத்தியில் நெருக்கடி மிகுந்த பகுதியான நிப்பான் ஓட்டல் சந்திப்பு அருகே ராணுவ பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட நான்குபேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டுவெடித்த பகுதியில்தான் தரைப்படை மற்றும் விமானப்படையின் தலைமையகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுகர்த்தோ கவலைக்கிடம்ஜகார்த்தா: இந்தோனேசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுகர்த்தோ உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளது. கடந்த வெள்ளி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 2வது பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், அவரது சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். . இந்தோனேசிய அதிபராக 30 ஆண்டு காலம் பதவி வகித்த சுகர்த்தோ, கடந்த 1998ம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். 86 வயதாகும் அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரை அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ நேற்று சென்று பார்த்தார். கென்யாவில் 50 பேர் கருகி சாவுநைரோபி : கென்யாவில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்ததேவாலயத்தை கும்பல் ஒன்று தீவைத்துக் கொளுத்தியதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கென்யாவில் தேர்தல் முடிவு தொடர்பான சர்ச்சையை அடுத்து வெடித்த வன்முறைகள் நீடித்து வரும் நிலையில், இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. . கென்யாவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் கிபகி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியினர் இதனை ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதிபர் வெற்றிபெற்றது செல்லாது என்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கென்யாவில் வன்முறை வெடித்து பல இடங்களில் இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு எல்டோரட் என்னும் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது கும்பல் ஒன்று அந்த தேவாலயத்தை தீவைத்துக்கொளுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியானார்கள். இதனையடுத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியிருக்கிறது. கென்யாவில் வெடித்துள்ள இனக்கலவரம் மேலும் தீவிரமாகலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனிடையே அதிபர் கிபோகி எதிர்க்கட்சியினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் தேர்தல் செல்லாது என அறிவிக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ஒடிங்கா தெரிவித்துள்ளார். கென்யாவில் ஏற்பட்டுள்ள நிலைமை அந்நாட்டில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Write Comment |
||||

அந்நாட்டிற்கு வந்துள்ள ஸ்காட்லாந்து போலீசார் தங்களது விசாரணையை இன்று(சனிக்கிழமை) துவக்கினர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஸ்காட்லாந்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உலக நாடுகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அதிபர் முஷாரப் பின்னர் சம்மதம் தெரிவித்தார்.
லர்கானா : மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவரது 19வயது மகன் பிலாவால் பூட்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடக்க இருக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு : இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நான்குபேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.


