அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பொங்கட்டும் மங்கலப் பொங்கல்
Saturday, 12 January 2008

 உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

தமிழர் திருநாளாம் தைத் திருநாளின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

உழைத்து அலுப்பான மக்கள், இளைப்பாறவும், வாழ்வில் வளம் சேர்க்க வாரிக் கொடுத்த இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நல்ல திருநாள் இத் தைத்திருநாள்.

எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும், வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்திற்கும் இல்லாத மகிமை, இவ்விழாவுக்கு மட்டுமே உண்டு.

நான்கு நாள் கொண்டாடப்படும் இப்பண்டிகை மார்கழி கடைசி நாளான போகிப் பண்டிகையில் இருந்து துவங்குகிறது.  இந்நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் வழக்கம்.

 

அதைத் தொடர்ந்து தை முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும்,

அதையடுத்து காணும் பொங்கலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலன்று உழவுக்கும், உழைப்பிற்கும் உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கால்நடைகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி வேண்டிய உணவளித்து மகிழ்ச்சியடைவர்.

காணும் பொங்கலன்று உறவினர்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து
மகிழ்வர்.

 

பொங்கல் வைக்கும் முறை


பொங்கல்  நாளன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

 

இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர்.

தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான்.  இது  தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

இந்த பொங்கல் எல்லா வளமும் நலமும் தந்து மகிழ்விக்கட்டும்!




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code