நகரும் தேவாலயம் |
| Friday, 26 October 2007 | ||||
ஜெர்மனி நாட்டில் ஒரு பழங்கால தேவாலயத்தை அப்படியே தூக்கிச் சென்று வேறொரு இடத்தில் வைக்க உள்ளனராம். அந்நாட்டில் உள்ள ஹியர்டாப் எனும் கிராமத்தில் பழங்கால தேவாலயம் ஒன்று இருக்கிறது. இந்த தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலக்கரி பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. . இதையடுத்து இங்கு மிகப் பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்த தேவாலயத்தை அகற்றி வேறொரு இடத்தில் அப்படியே கொண்டு வைப்பது என முடிவு செய்துள்ளனர். இதற்காக ராட்சத மரக்கட்டைகளை கொண்டு இந்த தேவாலயத்தை அப்படியே பெயர்த்து எடுத்து பிரம்மாண்டமான அடித்தளத்தின் மீது வைத்து விட்டனராம். இனி இந்த தேவாலயத்தை இழுத்துச் சென்று 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் மீண்டும் நிர்மானிக்க உள்ளனராம். சுமார் 4 மில்லியன் டாலர் செலவில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ![]()
Write Comment |
||||

ஜெர்மனி நாட்டில் ஒரு பழங்கால தேவாலயத்தை அப்படியே தூக்கிச் சென்று வேறொரு இடத்தில் வைக்க உள்ளனராம். அந்நாட்டில் உள்ள ஹியர்டாப் எனும் கிராமத்தில் பழங்கால தேவாலயம் ஒன்று இருக்கிறது. இந்த தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலக்கரி பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 



