| தியாகராஜர் ஆராதனை துவக்கம் |
| Wednesday, 23 January 2008 | ||||
திருவையாறு: தியாகராஜரின் 161வது ஆராதனை விழா திருவையாறில் இன்று துவங்குகிறது.தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் உலகப்பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆராதனை விழா, இன்று மாலை 5 மணிக்கு இஞ்சுக்குடு கணேசன், ராமதாஸ் நாதஸ்வரம், ராதா கிருஷ்ணன் ஆகியோரின் தவில் மங்கல இசையுடன் ஆரம்பமாகிறது. தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் இந்த விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சட்டீஸ்கர் மாநில ஆளுனர் நரசிம்மன் விழாவை துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் விஜயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இவ்விழா வரும் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும். விழா துவங்குவதற்கு முன்பாக திருவையாறில் உள்ள தியாகராஜரின் இல்லத்தில் இருந்து அவரது உருவப்படங்களுடன் ஊர்வலம் புறப்பட்டு, காவிரி ஆற்றின் வடக்குக் கரையோரம் அமைந்துள்ள தியாகராஜர் சமாதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

திருவையாறு: தியாகராஜரின் 161வது ஆராதனை விழா திருவையாறில் இன்று துவங்குகிறது.
