| செவ்வாயில் மனித உருவம்? |
| Thursday, 24 January 2008 | ||||
புளோரிடா : செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்க்ள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்து விட்டதாக லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு `ஸ்பிரிட்' என்ற ரோபோட்டை அனுப்பி வைத்தது. இந்த ரோபாட் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று பல்வேறு படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் ஒரு படத்தை அனுப்பியது. இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2-ந் தேதி இன்டர்நெட் மூலம் வெளியிட்டது. அந்த படம் முழுவதும் சிவப்பு மணல்களாகவும், பாறைகளாகவும் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இந்த புகைப்படங்களை ஆய்வு செய்தது. அந்த புகைப்படத்தில் ஒரு இடத்தில் பாறை மீது மனித உருவம் இருப்பது போன்ற தோற்றம் இருப்பதை கண்டுபிடித்தது. அந்த உருவம் பெண் ஒருவர் அமர்ந்திருப்பது போல் காட்சியளிக்கிறது. எனினும் இப்படம் மிகத் தெளிவாக இல்லை. இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான ஆதாரம் இது என்று குறிப்பிட்டுள்ளது. இப்படம் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருசிலர் இதனை மனித உருவம் என்றும், பாறை என்றும், வேற்றுகிரகத்து ஜீவராசிகள் என்றும் கூறிவருகின்றனர். என்றாலும், புகைப்படங்களை வெளியிட்ட நாசா ஆய்வு மையம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டுமாயின் நாசா விஞ்ஞானிகள் மவுனம் கலைக்க வேண்டும்.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

புளோரிடா : செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்க்ள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்து விட்டதாக லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


