அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விருது பெற்றார் ; வீர மரணம் அடைந்தார்
Monday, 28 January 2008
 விருது அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் தீவிரவாதிகளின் தோட்டாவை முததமிட்டு வீர மரணமடைந்தார் ராணுவ  அதிகாரி ஒருவர்.

கல் மனதையும் கரையச் செய்யும் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது அசாமின் எல்லைப் பகுதியான தின்சுகியாவில்.

இங்கே நாம் இல்லத்தில் இன்புற்றிருக்க எல்லையில் நித்தமும் செத்து மடியும் உயிர்கள்தான் எத்தனை எத்தனை!

27 வயதாகும் சவுத்திரிக்கு அடுத்த மாதம் திருமணம். ராணுவத்தில் கேப்டன் பதவி வகித்து வந்த சவுத்திரி,  நாட்டை துண்டாட நினைத்த பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வேங்கை.

எல்லை தாண்டி வர எத்தனித்த எதிரிகளை தனது துப்பாக்கிக்கு இரையாக்கியதாலோ என்னவோ தீவிரவாதிகளின் பழிவாங்கும் பட்டியலில் முக்கிய இடம் சவுத்திரிக்கு.

'இளங்கன்று பயமறியாது' என்ற உவமைக்கு உயிர் கொடுத்தவர் சவுத்திரி.

ஜம்மு காஷ்மீர் கட்டுப்பட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் இவர் காட்டிய நெஞ்சுரத்தை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு 'சேனா' விருது அறிவித்து கவுரவித்தது.

ஏற்கனவே, திருமண ஏற்பாடுகளில் மகிழ்ச்சியாய் இருந்த சவுத்திரியின் குடும்பத்திற்கு விருது அறிவிப்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சவுத்திரியின் வரவிற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர் அவரது உறவினர்கள்.

இந்நிலையில்தான் ,யாரும் எளிதில் ஜீரணிக்க முடியாத அந்த சோகம் அரங்கேறிவிட்டது.

கோர்கா ரெஜிமென்ட் படைக்குத் தலைமையேற்று, மெச்சாகி காட்டுப் பகுதியில் உல்பா தீவிரவாதிகளின் உயிர்வேட்டைக்குச் புறப்பட்ட சவுத்திரி, சுமார் ஒருமணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின் தன் இன்னுயிரை ஈந்தார்.

கொடிய சக்தியிடம் இருநது வந்த அந்த குண்டு சவுத்திரியின் உயிரைக் குடித்தது.

அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் விதியின் உயிர் பசிக்கு விருந்தானார் சவுத்திரி.

தனது திருமணத்திற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்த சவுத்திரி, இப்படி முழுவதுமாக விடுப்பு எடுப்பார் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இன்பம் பொங்கி வழிந்த சவுத்திரியின் குடும்பத்தில் இடியாய் இறங்கியது இந்த மரணச் செய்தி.

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவேயில்லை அந்தக் குடும்பம்.

அறிவிக்கப்பட்ட விருது அப்படியே இருக்க, பெற்றுக் கொள்ளவேண்டிய சவுதிரியோ சவப்பெட்டியில் சடலமாய்...

எல்லையில் சொல்லி மாளமுடியாத இது போன்ற எத்தனையோ சோகங்கள் இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

நாட்டை துண்டாடத் துடிக்கும் தீய சக்திகளிடம் இருந்து என்று தணியும் இந்த சுதந்திர தாகம்



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code