அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தமிழ் வளர்க்கும் 'செம்மொழி மையம்'
Thursday, 31 January 2008

 தமிழகத்தில் ரூ.76.32 கோடி செலவில் 'தமிழ் செம்மொழி மையம்' அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி தமிழறிஞர்களுக்கும், அன்பர்களைகளுக்கும் காதில் இன்பத் தேனாய் வந்து பாய்ந்திருக்கும்.

 

முத்தமிழ் அறிஞர் கருணாநிதிதான் இம்மையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் இந்த மையம் தமிழ் மொழியை பாதுகாத்து மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும்.

தமிழ்மொழி தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமிழ் சான்றோர்கள் ஈடுபடுவார்கள் என்று நினைக்கும் போது மொழிப்பற்று இருக்கும் எவருக்கும் இன்பமான செய்திதான்.

மையம் அமைவதற்கான எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கும் மத்திய அரசுக்கும், தமிழ் மையம் உருவாக பாடுபட்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுவோம்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code