அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
புகை மனித உயிருக்கு பகை
Friday, 15 February 2008

 புகை பிடிப்பதால் மனிதனின் உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால், அதிவிரைவில் ஆளையே கொல்லும் என்பது தெரியுமா...?

கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 11 லட்சம் வீடுகளில் கனடாவைச் சேர்ந்த குளோபல் ஹெல்த் மற்றும் இந்திய மருத்துவ  கவுன்சில் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கிடைத்திருப்பதுதான் இந்த அதிர்ச்சித் தகவல்.

புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் நால்வருக்கு ஒருவர் என்ற வீதத்தில் மரணத்தை முத்தமிடுகிறார்களாம்.  மிகவும் நடுத்தர வயதினர் இப்படி இறந்து போவது வேதனையல்லவா

புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு பத்து ஆண்டுகள் மட்டும்தான் ஆயுள் நீடிக்கும் என்பது இப்போதைய லேட்டஸ்ட் தகவல்.

சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த புகைப்பழக்கம் உயிரையே குடிக்கும் என்றால்  இனியும் வேண்டுமா அந்த வெண்குழல் விரோதி.

 

யாராவது காசு கொடுத்து உயிரைத் தொலைப்பார்களா?

புகைப் பிடிக்க ஆரம்பத்த பிறகு முதலில் தாக்கப்படுவது சுவாசக் குழாய். பின்னர் இதய நோயாக அது வளர்கிறது. இதய நோய் முற்றி பக்கவாதத்திலோ, புற்றுநோயிலோ வந்து முடிந்து விடும். அது வாழ்கையை முடித்து விடும்.

புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்றாண்டுகளில்  சுமார் 10
லட்சமாக அதிகரிக்கப் போகிறதாம்.  அதிலும் 50 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாத ஏழைகள்  என்பதுதான் பரிதாபம்.

அடுத்த வரும் ஆண்டுகளிலாவது இப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவதாக பிரிட்டிஷ்ஷில் 40 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 15 சதவீதம் பேரும், சீனாவில் ஒன்பது சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்பிலும் இந்தியாவின் விழுக்காடு மிகக் குறைவாகவே உள்ளது. உயிர் நெறிக்கும் அந்த காலனை உதறிவிடுவதற்கு மனமில்லையோ இந்தியர்களிடம்!

ஒருவன் புகை பிடிப்பதற்காக பற்ற வைக்கும் போது, அவனது ஆயுள் இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கும் என்ற புள்ளி
விபரம் அவனுக்கு புலப்படும் வகையில் செய்தால்தான் இப்பழக்கத்தை அறவே ஒழிக்க முடியும்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code