அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்றவார உலகம் : 17-02-08
Monday, 18 February 2008

கிழக்கு திமோர் அதிபர் மீது தாக்குதல்


 திலி :  கிழக்கு திமோரின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்ட்டா மீது புரட்சிக்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அதிபர் படுகாயத்துடன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். பிரதமரும் காயமின்றி உயிர் தப்பினர்.

ராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டு சமீபத்தில் சுதந்திரம் பெற்ற கிழக்கு திமோர் நாட்டின் அதிபராக இருப்பவர் ஜோஸ் ரமோஸ் ஹோர்ட்டா.  இவருடன் நாட்டின் பிரதமர் ஜனானா குஸ்மாவும் அதிபரின் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, அந்நாட்டில் இயங்கி வந்த புரட்சிப் படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் அதிபர் ஜோஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் உடன் வந்த பிரதமர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அதிபரின் பாதுகாவலர்கள் இருவர் இறந்தனர்.புரட்சிப் படை தலைவரும் பலியானார்.

பாக்.,தூதரக அதிகாரி கடத்தல்


இஸ்லாமாபாத் :   ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடத்தப்பட்டிருக்கலாம், என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருப்பவர் தாரிக் அஸிஸுதீன். இவர் நேற்று(திங்கள் கிழமை) பாகிஸ்தானுக்கு வந்து விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

ஆப்கான் எல்லையையொட்டி  வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காணாமல் போனதாகவும், அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த அதிகாரி நேற்று காலை 11 மணியளவில் பெஷாவரிலிருந்து பேசினார் என்றும், அதன் பின்னர்தான் அவர் காணாமல் போய்விட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஹிலாரியை முந்தினார் ஒபாமா


 வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா, தனது சக போட்டியாளர் ஹிலாரியை முந்துகிறார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட், விர்ஜீனியா, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் நடந்த தேர்தலில் ஒபமா மகத்தான வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், ஹிலாரியை விட ஒபாமாக அதிக புள்ளிகளைப் பெற்றார்.

குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னும் மேற்கண்ட மூன்று மாகணங்களில் வெற்றி பெற்றார்.

ஹிலாரிக்கு மற்றொரு பின்னடைவாக, அவரது பிரச்சார துணை  மேலாளர் மைக் ஹென்றி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார்.

இரு தினங்களுக்கு முன்புதான் ஹிலாரி தனது  மேலாளரை பதவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 8ல் மலேசிய தேர்தல்


கோலாலம்பூர் : மலேசியாவில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டதைத்த் தொடர்ந்து மார்ச் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும், என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மலேசிய பார்லிமென்ட்டின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 19ம் தேதிதான் முடிவடைகிறது. ஆனால், மலேசிய அரசுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தியது, பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சித் தலைவர் இப்ராகிம் ஏப்ரல் வரை தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போதைய பிரதமர் முகமது படாவி முன்னதாக தேர்தல் நடத்த திட்டமிட்டார்.

எனவே, மன்னரை சந்தித்துப் பேசிவிட்டு, புதன்கிழமை மலேசியா பார்லிமென்ட் கலைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

பார்லிமென்ட்டுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் மார்ச் 8ம் தேதி 222 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும், என தலைமைத் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷீத் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் 24ம் தேதியில் இருந்து துவங்குகிறது.

இலியான்ஸ் பல்கலை.,யில் துப்பாக்கி சூடு


இலினாய்ஸ் : அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் வகுப்பில் இருந்த மாணவர்கள் மீது முன்னாள் மாணவன் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் ஐந்து மாண்வர்கள் பலியாயினர். சுட்டவனும் தற்கொலை செய்து கொண்டான்.

இலினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோவின் மேற்குப் பகுதியில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் வகுப்பு ந்டந்து கொண்டிருக்கும் போது, இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தியா ஒருவன் வகுப்பறையில் புகுந்து மாணவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டான்.


இந்த சம்பவத்தில் நான்கு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 17க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், ஹாஸ்டலில் இருப்பவர்கள் அங்கே தங்கி இருக்கும் படியும் கல்லூரி நிர்வாகம் எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணையில், அந்த மர்ம நபர், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடக்கும் இது போன்ற சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

நியூமெக்சிகோவில் ஹிலாரி வெற்றி


 வாஷிங்டன்  : அமெரிக்கா அதிபருக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் ஒபாமா பராக்கை விட ஹிலாரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில், நியூமெக்சிகோ மாகாணத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி, ஹிலாரியின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு ஆதரவாக 14 ஓட்டுக்களும், ஒபாமாவுக்கு ஆதரவாக 12 ஓட்டுக்களும் கிடைத்தன.

தற்போது வரை நடந்து முடிந்துள்ள வாக்கெடுப்பில், ஹிலாரிக்கு ஆதரவாக 1,220 பிரதிகளும், ஒபாமாவுக்கு ஆதரவாக 1,276 பிரதிநிதிகளும் வாக்களித்துள்ளனர்.
 
இருவருக்கும் இடையிலான பிரதிநிதிகளின் ஆதரவு எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
 
வரும் மார்ச் 4ம் தேதி ஒஹையோ, டெக்சாஸ் மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறும் ஜனநாயக கட்சி வேட்பாளர், அதிபர் தேர்தல் வேட்பாளராகும் தகுதியை பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கூறுகையில், 'ஒபாமா மற்றும் மெக்கெய்னையும் ஹிலாரி முந்துவார்,' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் பேரணி : தமிழர்கள் கைது


கோலாலம்பூர் : மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி அமைதிப் பேரணி நடத்திய தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் சம உரிமை கோரி மலேசிய தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது தடியடி நடத்தியும் கலைத்தனர். மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று மலேசியாவில் தமிழர்கள் அமைதியாக பேரணி நடத்தி, கையில் ரோஜாக்களுடன் பிரதமர் படாவியிடம் மனு கொடுப்பதற்காக பார்லிமென்ட் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து.நிறுத்தியதோடு அல்லாமல், அவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை

வீசியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள‌ை கலைத்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code