| தமிழுக்கு வெற்றி |
| Monday, 18 February 2008 | ||||
புதுடில்லி : தமிழகத்தில் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கி தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கும் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டது. அதன்படி ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு 2006-07 கல்வியாண்டிலும், அதனைத் தொடர்ந்து 2007-08 கல்வியான்டில் ஏனைய 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச், விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது. தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கி தமிழக அரசு வெளிட்டுள்ள உத்தரவு அந்த மாநில அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறிய நீதிபதிகள், இதுபோன்று கர்நாடக, மராட்டிய மாநில அரசுகளும் சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக் காட்டினர்.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

புதுடில்லி : தமிழகத்தில் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


