| சென்ற வார உலகம் : 09-03-08 |
| Monday, 10 March 2008 | ||||
புலிகள் மீது நடவடிக்கை தொடரும் : ராஜபக்சே கொழும்பு : விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு அங்குல இடமும் மீட்கப்படும் வரை அவர்களுடனான போர் ஓயாது, அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும், என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார். கடந்த வாரம் கொழும்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே கூறுகையில், 'இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் போர் நடைபெற்று வந்தாலும், மனித உரிமைகளை மீறும் சூழ்நிலைகள் ஏதும் ஏற்பட்டதில்லை. தமது தலைமையில் இலங்கை வலுவாகவும், ஸ்திரமாகவும் இருக்கிறது,' இவ்வாறு ராஜபக்சே தெரிவித்தார். ஒகியோ மாகாணத்தில் ஹிலாரி வெற்றி டெக்சாஸ் : அமெரிக்க அதிபர் பதவியில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய ஒகியோ மாகாணத்தில் நடந்த தேர்தலிலும், ரோடி தீவு மாகாணத்தில் நடந்த தேர்தலிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி விட்டு ஹிலாரி வெற்றி பெற்றார்.அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவே உள்ளது. சில மாகாணங்களில் ஹிலாரியை விட அதிக வாக்குகள் பெற்று ஒபாமா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட நேற்றைய வாக்குப்பதிவில் ரோடி தீவு மற்றும் ஓகியோவில் ஹிலாரி முன்னிலை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்திலும் இந்த இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் இறுதி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் புலிகள் ஆதரவு எம்பி., பலிகொழும்பு : இலங்கையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் புலிகள் ஆதரவு எம்பி., சிவநேசன் பலியா னார். இலங்கையின் யாழ்பாண மாவட்டத்தின் எம்பியாக கடந்த 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டணி சார்பில் பார்லிமென்ட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் சிவநேசன் எம்.பி., இவர் 6ம் தேதி (வியாழக்கிழமை) கிளிநொச்சியின் மல்லாவியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் வன்னிப பகுதியின் வடக்கு யாழ்ப்பாணத்தை இலங்கையின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது மாங்குளம் அருகே சாலையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடியில் கார் சிக்கி தூக்கி எறியப்பட்டது. இந்த விபத்தில் சிவநேசன் எம்பி படுகாயமடைந்தார். இவர் உடனடியாக மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேய அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த மகேஸ்வரராஜா என்ற டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இது முழுக்க முழுக்க ராணுவத்தின் திட்டமிட்ட சதி, என தமிழ் தேசிய கூட்டணியின் மற்றொரு எம்பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் இது குறித்து கூறுகையில், ராணுவத்தின் ஊடுருவி தாக்கும் சிறப்பு படையினர்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர், என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மீண்டும் போர் துவங்கியதற்குப் பிறகு படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் எம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் தேர்தல் கோலாலம்பூர் : பரபரப்பான சூழ்நிலையில் மலேசியா பார்லிமென்ட்டுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் தேசிய முன்னணி கூட்டணி வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை என்றாலும், கடந்த முறையைப் போல் இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியர்கள் மற்றும் சீனர்கள் போன்ற சிறுபான்மையினர் மீது படாவி தலைமையிலான அரசு மேற்கொண்ட அடக்குமுறை அந்த கூட்டணி மீதான செல்வாக்கை மக்கள் மத்தியில் வெகுவாக குறைத்து விட்டதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 222 உறுப்பினர்கள் கொண்ட பார்லிமென்ட்டில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலேசியாவின் 12 மாகாணங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 13 வது மாகாணமான சராவக்கில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. மார்கரேட் தாட்சர் மருத்துவமனையில் அனுமதிமுன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்க்கரேட் தாட்சர் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வயது 82. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பக்கவாதத்தினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், தாட்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்றாலும் வழக்கமான பரிசோதனைகளுக்காகத்தான் இவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட தாட்சர், பிரிட்டனின் முதல் பெண் பிரதமராக திகழ்ந்தவர். 11 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த அவர், 1990 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Write Comment |
||||

கொழும்பு : விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு அங்குல இடமும் மீட்கப்படும் வரை அவர்களுடனான போர் ஓயாது, அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும், என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.
டெக்சாஸ் : அமெரிக்க அதிபர் பதவியில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய ஒகியோ மாகாணத்தில் நடந்த தேர்தலிலும், ரோடி தீவு மாகாணத்தில் நடந்த தேர்தலிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி விட்டு ஹிலாரி வெற்றி பெற்றார்.
னார்.
கோலாலம்பூர் : பரபரப்பான சூழ்நிலையில் மலேசியா பார்லிமென்ட்டுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. 


