அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வாஸ்து சாஸ்திரம் தெரியுமா...?
Thursday, 06 December 2007
 வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு கட்டிடக்கலை என்பன தொடர்பான இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வாஸ்து என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.

இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் புர்த்தி செய்வதுடன் கட்டப்படுகின்ற கட்டிடம் மனிதன் இயற்கையுடனும் இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவது வாஸ்து சாஸ்திரம்.  


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code