| வாஸ்து உண்மையா...? |
| Thursday, 06 December 2007 | ||||
இந்த நவீன விஞ்ஞான காலத்தில் வாஸ்து அது இது என நேரத்தை செலவிடவோ அதில் ஆர்வம் காட்டவோ நம்மில் பலருக்கு நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. படித்தவர்கள் பகுத்தறிவாளர்கள் வாஸ்துவை நம்புவதில்லை. ஆனால் வாஸ்துவும் ஒருவகையில் விஞ்ஞானம்தான் என்றே கருதப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...? இங்கே சில நிரூபிக்கப்பட்ட உண்மைகள் வாஸ்துவை உண்மை என உறுதிப்படுத்துகின்றன. ஒரு மதத்திற்கோ இனத்திற்கோ உரியதாக இல்லாமல் உலகம் முழுவதற்குமே உரிய ஒரு விஞ்ஞானமாகவே கருதப்படும் இந்த வாஸ்துவை நிரூபிக்கும் பிரமிட் கட்டட அமைப்பு குறித்து இன்று பார்ப்போம்! பிரமிட் - கட்டிட அமைப்பில் சில நன்மைகள்: பிரமிட் வடிவ கூம்பிற்குள் வைத்த பிளேடு போன்ற பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கூர்மை மங்காமல் இருக்கிறது பிரமிட் வடிவ கட்டிடங்களில் தியானம் செய்யும் போது மனநிலை மிக விரைவாக ஒன்றுபடுகிறது போன்றவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்டதே அங்கு இறந்து போன அரச குடும்பத்தார் உடல்கள் அழியாமல் பாதுகாக்கத்தான். அவைகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் கழித்தும் சேதமடையாமல் இருப்பதற்கு பிரமிட் வடிவமும் ஒரு காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனவே இதன் மூலம் கட்டிட அமைப்பைக் கொண்டு அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்களுக்குள் சில மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் வாரத்தில் பார்ப்போம்.
Write Comment |
||||

இந்த நவீன விஞ்ஞான காலத்தில் வாஸ்து அது இது என நேரத்தை செலவிடவோ அதில் ஆர்வம் காட்டவோ நம்மில் பலருக்கு நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. படித்தவர்கள் பகுத்தறிவாளர்கள் வாஸ்துவை நம்புவதில்லை. 


