|
Wednesday, 09 January 2008 |
நீங்கள் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும் பழக்கம் கொண்டவரா...? அப்படியெனில் நல்ல சகுனம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
யதேச்சையாக ஏற்படும் சகுனமே சிறந்தது. மாங்கல்ய பெண் எதிரில் வந்தால் அது நல்ல சகுனம். ஆனால் அவள் தலைவிரிகோலமாக அலங்கோலமான நிலையில் வந்தால் அது நல்ல சகுனம் இல்லை என்று கூறப்படுகிறது.
நீர்க்குடம், பால் குடம், தயிர் குடம், அன்னம், வேசி, சலவை தொழிலாளி, கள் குடம், கரும்புக் கட்டு, ஜோடி பிராமணர்கள் ஆகியோர் எதிரில் வந்தால் நல்ல சகுனம். ஆனால் ஒற்றை பிராமணர் எதிரில் வருவது நல்லதல்ல.
மற்ற உயிரினங்களில் மயில், கோழி, கிளி, கொக்கு, முயல், நரி, கழுதை, பசு, மான், அணில், ஒந்தி, வேங்கை, நாரை, செம்போத்து ஆகியவை இடமிருந்து வலமாக சென்றால் அதையும் நல்ல சகுனமாகவே கருதலாம் என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.
|