அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வாஸ்து கூறும் மண்ணின் பலன்கள்
Thursday, 14 February 2008
வீடு கட்டப்படும் முன், வீடு கட்டும் இடத்தைச் சேர்ந்த மண்ணின் இயல்புகள் குறித்து வாஸ்து என்ன சொல்கிறது பார்ப்போமா?

 வீடு கட்டப்படும் மனையின் மண்ணுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன் இயல்புகளுக்கு ஏற்ப அதில் வீடு கட்டி வாழ்வோருக்கு பலன்கள் உண்டு என்கிறது வாஸ்து.

உதாரணமாக மனையின் மண்ணின் நிறமானது இளம் மஞ்சளாக இருக்குமானால் நறபலன்கள் ஏற்படும். அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்குப் பலவகையான நன்மைகள் உண்டாகும்.

மண்ணின் நிறமானது சிவப்பாக இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் சிறு சிறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

மனையின் மண் பழுப்பு நிறமாக இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது.

மணற்பாங்கான மனையில் வீடு கட்டுபவர்கள் புகழும் செல்வாக்கும் பெறுவார்கள். கலைஞர்கள் அரசியலில் பங்கு பெறுவோர்கள் போன்றவர்களுக்கு அத்தகைய மனை ஏற்றதாகும். அவர்களுடைய வாழ்க்கையில் பல வகையான சிறப்புகள் உண்டாகும். ஆனால் அவர்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது.

மனையில் கருமணல் நிறைந்திருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களின் செல்வநிலை வேகமாக உயரும். பொன், பொருள் என்று நிறையச் சேர்க்கும் வாய்ப்புகள் உருவாகும்.

மனையில் கூழாங்கற்கள் நிறைந்திருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு நிலையான வாழ்க்கை அமையாது.  அவர்களுடைய நிலையானது உயர்வதும் தாழ்வதுமாகவே இருக்கும்.

எனவே, வீடு கட்டும் முன்னர் மேற்கண்டவற்றை நினைவில் கொண்டு மனையின் மண்ணின் குணத்தை சோதித்துப் பார்த்து வீடு கட்டி பலன் பெறுங்கள்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code