அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
Wednesday, 07 May 2008
 பறந்து செல்லும் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் நியூவோ லியோன் மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது.

இது போன்று அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தித்தான் போகிறார்கள் இது போன்று வேற்று கிரகவாசிகள் பூமியில் வந்து விட்டுப் போனார்கள் என்றும் தகவலும் காட்டுத் தீயாக பரவுவது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் மனித உருவம் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2006 ம் ஆண்டு மே மாதம் இதே போன்று ஒரு செய்தி மெக்சிகோவில் பரவியது. வானில் அடையாளம் தெரியாத மர்ம பொருட்களை படம் பிடிக்கும் விண்ணியல் ஆய்வாளர்கள் பலர் அப்போது மலைப்பகுதியில் தாவித் தாவி பறக்கும் பெண் உருவத்தைக் கண்டுள்ளனர்.

இப்போது இரண்டு ஆண்டுகளுக்குபின் பெண் உருவம் நியூவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் பிரபல விண்ணியல் ஆய்வாளர் அன்னா லூசியா சிட் என்பவர் தலைமையிலான குழுவினர் இதை உறுதி செய்துள்ளனர். மேலும் இதற்கான வீடியோ பட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code