அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
Monday, 11 February 2008
 மும்பை : பங்கு வர்த்தகர்களால் மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'பவர்' நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இடம் பிடித்தன. இதனை 'லிஸ்டிங்'(Listing) என்பர்.

ரிலையன்ஸ் குழுமத்தில் அனில் அம்பானியின் நிறுவனமான 'ரிலையன்ஸ் பவர்' பங்கு வர்த்தகத்தில் இறங்குவதற்காக ஜனவரி மாதத்தில் ஐபிஓ(IPO) முறையில் பங்குகளை வெளியிட்டது.

முகமதிப்பு ரூ. 10 கொண்ட இந்த பங்குகள்  ரூ. 425 முதல் 450ல் வரை விற்பனை செய்யப்பட்டன.

15ன் மடங்குகளாக விற்பனை செய்யப்பட்ட இந்நிறுவன பங்குகளை ஒருவர் அதிகபட்சம் 225 பங்குகள் வரை வாங்க முடியும் என அறிவித்திருந்தது.

பெரும்பாலான பங்கு வர்த்தகர்கள் இப்பங்குகளைப் பெற விண்ணப்பத்திருந்ததால் எதிர்பார்க்கப்பட்டதை விட 73 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப் பட்டிருந்தது.
அதாவது மூன்று பில்லியன் அமெரிக்க லர்கள் அளவுக்கு நிதி கிடைத்தது.

இதில் மிக அதிகபட்சமாக 225 பங்குகள் கோரியிருந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு ரிலையன்ஸ் பவர் பங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக, அந்நிறுவன பங்குகள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிறு முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ரிலையன்ஸ் பவர் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச்ச் சந்தையிலும் பங்குகள் நிறுவனப் பட்டியலில் இடம் பிடித்தது.

இதைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்குகள் அன்றாட பரிவர்த்தனையில் ஈடுபடும்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியம் ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை பரிந்துரைக்கப்பட்ட ரூ.450 விலையைக் காட்டிலும் உயர்ந்து ரூ.600 ஆக ஏற்றம் கண்டாலும் உடனடியாக சரிந்து குறைந்த பட்சமாக 389ரூபாயில் வந்து நின்றது.

இன்றைய பங்குச் சந்தையும் வீழ்ச்சி முகமாகவே இருப்பதால், இப்பங்குகளின் விலைகளில் சற்றே சரிவு ஏற்பட்டுள்ளது.

 


Comments (1)
RSS comments
16-07-2008 11:41
L;L;;'NKKKK
Written by VIDYA (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code