| குரங்கு கையில திருமணமாலை |
| Thursday, 28 February 2008 | ||||
ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு அருகே 200 கிமீ தொலைவில் உள்ளது கன்டேஸ்வரா கிராமம். அந்த காலை வேளையில் கிராமத்தினர் சுமார் மூன்றாயிரம் பேர் ஓரிடத்தில் குழுமி இருந்தனர். திருமண வைபத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.ஒருபுறம் பாட்டு, கூத்து, கச்சேரி என கிராமத்து மக்களில் சிலர் ஆனந்தமாய் ஆர்ப்பாட்டம் போட, மற்றொரு பக்கம் மணப்பந்தல் அலங்காரத்துடன் தயாராகிக் கொண்டிருந்தது. புரோகிதர் மிகுந்த சிரத்தையுடன் வேத மந்திரங்களை முழங்கி யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார். மணமேடையில் அமர்ந்திருந்த மணமக்களை பார்த்த எல்லோர் கண்களிலும் ஆச்சர்யம் அகலவில்லை. இரண்டு குரங்குகள் சிறப்பான அலங்காரத்துடன் ஒய்யாரமாக வீற்றிருந்தன. மணமகன் பெயர் மானு (வயது மூன்று). மணமகள் ஜூமுரி. மணப்பெண் ஜூமுரிக்கு சிவப்பு நிற திருமணச் சேலை கட்டி, பூமாலை அணிவித்து சந்தனம் பூசி உண்மையான மணப்பெண்ணைப் போலவே அலங்காரம் செய்திருந்தனர். அதே போல், மணமகனான மானுவையும் விட்டுவைக்கவில்லை. நேர்த்தியாக உடையணிந்து மலர் மாலை அலங்காரத்துடன் புதுமாப்பிள்ளை தோரணையுடன் அமர்ந்திருந்தது. மணப்பந்தலுக்கு வருவதற்கு முன் மானுவை அழைத்துக் கொண்டு ஊர் பொதுமக்கள் கோயிலுக்குச் சென்று வந்தனர். அட இதுதாங்க மாப்பிள்ளை அழைப்பு. மணமகனும், மணமகளும் அமர்ந்த பின், திருமண புரோகிதர் மந்திரம் இசைக்க இருவரும் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஊர் மக்கள் அட்சதை வீசி, கைதட்டி இவர்களது திருமணத்தை அங்கீகாரம் செய்தனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாமினா வளர்த்த செல்லக் குழந்தைதான் இந்த பெண் ஜூமுரி. மாமினாவின் கணவர் ஒருமுறை அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலில் இருந்து இந்த ஜூமுரியை அழைத்து வந்தாராம். அதுநாள் முதல் ஜூமுரி அந்த வீட்டில் ஒருவளாக வளர்ந்து வந்தது. ஜூமுரிக்கு வயதாகிக் கொண்டே போனதால் காலா காலத்தில் கல்யாணம் செய்து வைப்பதற்காக மாமினா தம்பதிகள் ஜூமுரி- மானு ஜோடிக்குத் திருமணத்தை செய்து வைத்துள்ளனர். மாப்பிள்ளை மானு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த திருமணம் குறித்து, புரோகிதர் தைதாரி தாஸ் கூறுகையில், ' இது எனக்கு புதுவிதமான அனுபவம். இதுவரை மிருகங்களுக்கு நான் திருமணம் செய்து வைத்ததில்லை. மிகவும் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மனிதர்களின் திருமணத்திற்கு என்னென்ன சம்பிரதாயங்கள் செய்வேனோ, அதை முழுவதையும் இந்த திருமணத்தில் செய்துள்ளேன்,' என்றார். குரங்கு கையில் பூமாலை என்று கேலியாக நாம் சொல்வது உண்டு. உண்மையிலேய குரங்கு கையில் திருமண மாலையை கொடுத்து அழகு பார்த்த மாமினா தம்பதியை என்ன சொல்லிப் பாராட்டுவது.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு அருகே 200 கிமீ தொலைவில் உள்ளது கன்டேஸ்வரா கிராமம். அந்த காலை வேளையில் கிராமத்தினர் சுமார் மூன்றாயிரம் பேர் ஓரிடத்தில் குழுமி இருந்தனர். திருமண வைபத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

