| பில்கேட்சை முந்தினார் பப்பெட் |
| Thursday, 06 March 2008 | ||||
நியூயார்க் : அமெரிக்காவின் நிதிநிறுவன தலைவர் வாரன் பப்பெட் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்சை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். இந்தாண்டிற்கான கோடீஸ்வரர்களின் பட்டியல் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்காவின் பெர்க் ஷயர் ஹாத்வே நிதி நிறுவனத்தின் தலைவரான வாரன் 62 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு வயது 77. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 52 பில்லியன் டாலராக இருந்தது. இதன் மூலம் கடந்த 13 ஆண்டுகளாக உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் வகித்த மைக்ரோசாப் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். மெக்சிகோவின் தொலை தொடர்பு நிறுவனத்தை நடத்தி வரும் கார்லோஸ் ஸ்லிம் 60 பில்லியன் டாலருடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். தனது வருமானத்தில் பெரும் பகுதியை பில்கேட்ஸ் நடத்தி வரும் பில் அண்டு மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக அளிப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு வாரன் பப்பெட் அறிவித்திருந்தார். இவரது நிறுவனமான பெர்க் ஷயர் ஹாத்வே பங்குகளின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக இந்த ஆண்டு உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு உலகம் முழுவதும் 1125 பெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாக போர்ப்ஸ் பட்டியலிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இது 946 ஆக இருந்தது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் டாலராகும். பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 469 பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 87 பேருடன் ரஷ்யா உள்ளது. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 53 பேருடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இவர்களில் 4 பேர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 பேருக்குள் நான்கு இந்தியர்கள்உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து பேருக்குள் இந்தியர்கள் நால்வர் இடம் பிடித்துள்ளனர். ஆர்சிலர் மிட்டல் குழுமத் தலைவர் லட்சுமி மிட்டல் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான்காவது இடத்தையும், 43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ரிலையன் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஐந்தாவது இடத்தையும், ரிலையன்ஸ் திருபாய் அம்பானி குழும தலைவர் அனில் அம்பானி 42 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர். டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் கேபி சிங் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உயர்ந்ததையடுத்து பெரிய தகவல் தொழில்நுட்ப் நிறுவனங்கள் முக்கிய இடங்களைப் பிடிக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன, என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

நியூயார்க் : அமெரிக்காவின் நிதிநிறுவன தலைவர் வாரன் பப்பெட் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்சை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். 

