| சர்வதேச மகளிர் தினம் |
| Saturday, 08 March 2008 | ||||
|
" ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் " என அன்றே பாடி வைத்தான் பாரதி. சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ம் தேதியன்று உலகெங்கும் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வையகம் தழைத்து வாழ்வாங்கு வாழ, நம்மை ஈன்றெடுத்த அன்னை முதல் ஈடு இணையில்லா எல்லா மகளிரையும் இந்நாளில் போற்றிப் புகழுவோம். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்! என அன்று இருமாப்போடு பாடிய பாரதி இன்றிருந்தால்... நீ கூறிய அந்த வேடிக்கை விநோத விந்தை மனிதர்கள் இன்றும் நம்மிடையே மந்தை மந்தையாய் உலவிக் கொண்டுதான் இருக்கின்றனர். மார்ச் 8 பெண்கள் தினம் ஏன் ?மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஏன் கொண்டாடுகிறோம், என எத்தனை அடித்தட்டு மக்களுக்குத் தெரியும். வாருங்கள் இந்நாளில அது ஏனென்று தெரிந்து கொள்வோம். பெண் விடுதலைப் போருக்கான முதல் விதை பிரான்ஸில் தான் விதைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்தாலியிலும் இதுதான் சமயம் என பெண்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கோரி வீதிகளில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்! இவ்வாறு வரலாறு கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொணணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது என்றாலும் அது முழுமையடைந்ததா என்றால் அது கேள்விக்குறிதான். இன்னும் நம் இந்தியாவில் 33 சதவீத ஒதுக்கீடு என்பது ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கிறது. ஆணுக்கு சரிநிகர் சமானமாய் சார்பில்லாமல் வாழும் நிலை வருமாயானால் அதுவே உண்மையான பெண் விடுதலை. பெண்களின் உரிமைகளைப் பேணிகாக்க, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க, அவர்களது வாழ்வுரிமையை மீட்டெடுக்க உறுதியெடுப்போம் இந்நாளில். பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ம் தேதியன்று உலகெங்கும் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

