| நீங்கள் உற்சாகமானவரா...? |
| Thursday, 13 March 2008 | ||||
நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் மனநிலை எப்படி? உள்ளிட்ட உங்களைப் பற்றிய ஓர் விரிவான ஆய்வைத்தான் இங்கே பார்க்கப் போகிறீர்கள்.கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மறைக்காமல் பதிலளிக்க வேண்டும். கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் போது, உங்களது எண்ணம் முழுமையான இருப்பின் அதற்கு 4 மதிப்பெண்களும், அநேகமாகச் சரியாக இருப்பின் 3 மதிப்பெண்களும், அரைகுறை என்றால் 2 மதிப்பெண்களும், எப்போதாவது என்றால் ஒரு மதிப்பெண்ணும், இல்லவே இல்லை என்றால் பூஜ்யமும் மதிப்பெண்ணாக நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். கீழே மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகள் அனைத்திற்கும் யாருடைய உந்துதலும் இல்லாமல் உங்களது உள் மன உணர்வு என்ன சொல்கிறது என்பதைக் கேட்டு சிந்தித்து பதிலளியுங்கள். சரி! இப்போது கேள்விகளுக்குப் போவோமா! 1. அதிகாலையில் எழுந்திருத்தாலை நான் அனுபவிக்கிறேன். 2. பெரும்பாலும் நான் நல்ல மனநிலையிலேயே இருப்பேன் 3. என்னை அனைவரும் நேசிக்கிறார்கள் 4. கண்ணாடியில் எனைக் காண்கின்ற பொழுது அதை நான் விரும்புகிறேன். 5. நான் ஒரு அறிவாளி 6. நான் செய்யும் தொழிலை அனுபவித்துச் செய்கிறேன். 7. எனது செயல்கள் என்னைப் பற்றி வெட்கப்படும் அளவுக்கு இல்லை 8. நான் சக்தி மிகுந்தவன்(ள்) 9. எனது நண்பர்களின் எண்ணிக்கையை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் 10. நான் அடிப்படையில் நல்லதையே நினைப்பவன்(ள்) 11. எனது தவறுகளைக் கண்டு நானே எள்ளி நகையாடுவதுண்டு 12. நான் இனிமையான பேர்வழி 13. நான் இன்னும் மாறிக் கொண்டிருக்கிறேன் 14. அடுத்தவர்கள் என்னைப் பற்றி கவனம் கொள்கிறார்கள் 15. நான் அன்பானவன் 16. எனது வாழ்க்கை பற்றி எனக்கு வருத்தம் இல்லை 17. நான் கவனம் கொள்ளும் மனிதர்கள் என் எண்ணத்தை மதிக்கிறார்கள் 18. எனது உணர்வுகளை வெளிக்காட்ட நான் பயந்ததில்லை. 19. சொர்க்கம் இருப்பது உண்மையானால், இறந்த பிறகு நான் அங்கு செல்வேன 20. அடுத்தவர்களுடன் உரையாடும் போது ஆறுதல் அடைகிறேன். 21. எனது வாழ்க்கையை நான் விரும்பும் வண்ணம் மாற்றியமைக்க முடியும் 22. நான் இதுவரை வாழ்ந்தது ஓரு இனிமையான வாழ்வு 23. எதுவும் எனக்கு மிக நல்லது என கூற முடியாது 24. நான் வாழும் இடம் எனக்கு பிடித்திருக்கிறது. 25. என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன். i மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் மதிப்பெண் அளித்து 80 முதல் 100மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் மிகுந்த உற்சாகமுடையவராக, தன்நம்பிக்கை நிறைவர்களாக பொறுமைசாலிகளாக, புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உடையவர்களாக இருப்பர். ii அறுபது முதல் 79 மதிப்பெண்கள் வரை பெற்றிருப்பவர்களுக்கு : உங்கள் உற்சாகத்திற்கு குறைவில்லை என்றாலும் அவ்வப்போது மனச்சோர்வு, மனத் தளர்ச்சி எட்டிப் பார்க்கும். என்றிருக்கிறது. iii 40 முதல் 59 வரை மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்களுக்கு : எது நடந்தாலும், அதனை நமக்குச் சாதமாக எடுத்துக் கொள்ள பழக வேண்டும். உங்களுக்கு தன்நம்பிக்கை குறைவு. எல்லா விஷயத்திற்கும் மற்றொருவரையே சார்ந்து வாழ்ந்து பழகி இருப்பீர்கள். அதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உற்சாக ஓடோடி வரும். iv பூஜ்யம் முதல் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு : உற்சாகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம். எப்போதுமே ஒருவித சோகம் உங்களைக் ஒட்டிக் கொண்டே இருக்கும். எதையுமே பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளத் தெரியாத நீங்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனேயே இருப்பீர்கள். மனது இளமையாக இருக்கும் போது, உடலில் உற்சாகம் ஓடோடி வரும். எனவே மனதை எப்போதும் இலேசாக, இளமையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்! அடைவீர்கள்.
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் மனநிலை எப்படி? உள்ளிட்ட உங்களைப் பற்றிய ஓர் விரிவான ஆய்வைத்தான் இங்கே பார்க்கப் போகிறீர்கள்.

