அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தக்காளி புலாவ்
Thursday, 27 March 2008
தேவையானவை

பிரியாணி அரிசி        :    அரை கப்
தக்காளி சாறு         :    6 கப்
பெரிய வெங்காயம்        :    2
எண்ணைய் (அ) நெய்    :     தேவையான அளவு
மிளகாய்த் தூள்         :     2 ஸ்பூன்
இஞ்சி விழுது         :    சிறிதளவு
மஞ்சள் தூள்        :    ஒரு ஸ்பூன்
கரம் மசாலா        :     1 ஸ்பூன்
பட்டை             :    ஒரு துண்டு
ஏலக்காய்            :    2
கிராம்பு             :    2 அல்லது 3
உப்பு             :     தேவையான அளவு

செய்முறை :

அரிசியை பொல பொல வென வடித்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணைய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு இவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் மிளகாய்தூள், இஞ்சி விழுது, மஞ்சள் தூள் இவற்றைப் போட்டு சிறிது வதக்கி, தக்காளிச் சாறு மற்றும் உப்பு சேர்த்து புரட்ட வேண்டும்.  

இந்த கலவையை சாதத்தில் ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும். இந்த கலவை மீது கொத்தமல்லித் தலையை சிறிது சிறிதாக நறுக்கி அதன் மீது தூவ சுவையான தக்காளி புலாவ் ரெடி.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code