|
Thursday, 29 November 2007 |
உங்கள் வீட்டில் தினமும் ஒரே மாதிரியான இட்லியை சுவைத்து சுவைத்து உங்கள் நாக்கு மறத்து போய் விட்டதா. அப்படியானால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க இந்த சாண்ட்விச் இட்லி சமைத்து ருசித்துப் பாருங்களேன்.
தேவையானப் பொருட்கள்:
இட்லி மாவு : 2 கப் கேரட் துருவல் : கால் கப் பீன்ஸ் : 2 ஸ்புன் (பொடியாக அரிந்தது) பச்சை பட்டாணி : 3 ஸ்புன் நெய் (அ) எண்ணை 3 ஸ்புன் பச்சை மிளகாய் : 2 (பொடியாக அரிந்தது) கடுகு : கால் ஸ்புன் உப்பு : கால் ஸ்புன்
கறிவேப்பிலை மல்லிதழை சிறிதளவு செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து பீன்ஸ்கேரட் துருவல்பட்டாணி போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மெல்லிய தீயில் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
இப்போது .இட்லி தட்டில் பாதி குழி நிரம்புமாறு மாவை ஊற்றி வைத்து அதன் மேல காய்கறி கலவை 1 ஸ்புன் வைக்க வேண்டும். பின்னர் காய்கறி கலவையின் மீது மீண்டும் மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கினால் ஆவி பறக்க சுவையான சான்ட்விட்ச் இட்லி ரெடி.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவு சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதனைப் பரிமாறலாம்.
பெரியவர்களும் விரும்பினால் சாப்பிடலாம்.
தேவைப்படுவோர்கள் தேங்காய் சட்னி வைத்தும் இதனை சாப்பிடலாம்.
|