| மட்டன் ஆம்லெட் |
| Monday, 19 May 2008 | ||||
தேவையானப் பொருட்கள்: ஆட்டுக்கறி - கால் கிலோமுட்டை - ஆறு வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - ஒன்று இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத்தூள் - அரைதேக்கரண்டி கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி தயிர் - கால் கோப்பை கொத்தமல்லி - ஒரு பிடி உப்பு - ஒன்றரை தேக்கரண்டி எண்ணெய் - கால் கோப்பை செய்முறை: கறியை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லியை நொறுங்க நறுக்கி கொள்ளவும். பின்பு தயிரில் இஞ்சி பூண்டு மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் உப்புத்தூள் ஆகியவற்றை கலந்து கறியை சேர்த்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதைத்தொடர்ந்து சட்டியில் எண்ணெய்யை ஊற்றி காயவைத்து நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கும். பிறகு தயிரில் ஊற வைத்துள்ள கறி கலவையை சேர்க்கவும். அடுப்பின் அனலை குறைத்து கொண்டு மூடி போட்டு வேகவிடவும். அடி பிடிக்கவிடாமல் கிளறி விடவும். நீர் முழுவதும் வற்றியவுடன் கரம்மசாலா கொத்தமல்லியை போட்டு கிளறி விட்டு இறக்கிவிடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் முட்டைகளை அனைத்தையும் உடைத்து ஊற்றவும். முட்டையுடன் உப்புத்தூள் மஞ்சத்தூள் சேர்த்து நுரை வரும் வரை அடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு தோசைக்கல்லை காயவைத்து அடித்து வைத்துள்ள முட்டை கரைசலில் இருந்து ஒரு கரண்டி ஊற்றவும் சிறிது வெந்தவுடன் ஒரு கரண்டி கறியை ஆம்லெட்டில் வைக்கவும். பின்னர் ஆம்லெட்டை மடித்து விட்டு கரண்டியால் நன்கு அழுத்தி திருப்பி போட்டு சுற்றிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். முட்டையோடு கறி சேர்ந்த காம்பினேஷன் மிகவும் சுவையாக இருக்கும்.
Write Comment |
||||

தேவையானப் பொருட்கள்:
ஆட்டுக்கறி - கால் கிலோ

