| வெண் பொங்கல் |
| Tuesday, 11 December 2007 | ||||
|
காலைப் பசிக்கு வெண் பொங்கல் போன்ற சிறப்பானதொரு உணவு இருக்க முடியாது. அப்படிப்பட்ட வெண் பொங்கலை எப்படி தயாரிப்பது என்பதை இன்று பார்ப்போம். தேவையான பொருட்கள் ![]() பச்சரிசி : 1ஆழாக்கு பாசிப்பருப்பு : அரை ஆழாக்கு எண்ணை : 50கி நெய் : 2 ஸ்பூன் மிளகு : 1 தேக்கரண்டி சீரகம் : 1 தேக்கரண்டி ப.மிளகாய் : 2 இஞ்சி : 1 சிறு துண்டு கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது உப்பு : 1 தேக்கரண்டி செய்முறை முதலில் பச்சரியையும், பாசிப்பருப்பையும் தண்ணீர் விட்டு நன்கு களைந்து கொள்ள வேண்டும். நன்கு களைந்த பிறகு, அதனை குக்கரில் வைத்து அதனுடன் 4 டம்ளர் நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இவற்றுடன் தோல் சீவிய இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு விட வேண்டும். இப்போது, ஒரு கடாயை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு நெய் அல்லது டால்டாவை ஊற்றி அதில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு வறுக்கவும். நன்கு பொரிந்தவுடன் அரிந்த பச்சை .மிளகாய், கருவேப்பிலையைப் போட்டு, முந்திரி சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் வெந்த பொங்கலை வெளியே எடுத்து மேற்சொன்ன கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி நெய்யையும் கொத்தமல்லித்தழையையும் தூவி இறக்கவும்.
Write Comment |
||||




