| திகட்டாத தேங்காய் சாதம் |
| Tuesday, 18 December 2007 | ||||
|
சாத வகைகளில் விதவிதமான சுவை கொண்ட உணவுகள் இருக்கின்றன. இன்று நாம் பார்க்கப்போவது தேங்காய் சாதம். தேவையானப் பொருட்கள் ![]() சாதம் : 2 கப் தேங்காய் : 1 மூடி (துருவியது) பச்சை மிளகாய் : 2 கடலை பருப்பு : ஒன்றரை டீஸ்பூன் கறிவேப்பிலை : சிறிது (பொடியாக நறுக்கியது) கடுகு, உளுத்தம் பருப்பு : 1 டீஸ்பூன் உப்பு : தேவையான அளவு நெய் அல்லது டால்டா: தேவையான அளவு பட்டை,சோம்பு, பிரியாணி பூ, கிராம்பு (தேவைப்பட்டால்) முந்திரிப்பருப்பு ஐந்தாறு பல் செய்முறை வாணலியை காயவைத்து நெய் அல்லது டால்டாவை ஊற்றி அது லேசாக உருக ஆரம்பித்தவுடன் முந்திரிப் பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். நன்றாக பொரிந்தவுடன் தயாராக எடுத்து வைத்துள்ள பட்டை சோம்பு, பிரியாணி பூ, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். இப்போது தேங்காய் துருவலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். குறிப்பிட்ட பதம் வரும் வரைதான் வதக்க வேண்டும், அதிகமாக வதக்கினால் சுவை இல்லாமல் போகும். அவ்வளவுதான் இப்போது, சாதத்தை எடுத்து வாணலியில் உள்ள கலவையில் போட்டு ஒன்றோடு ஒன்றாக வதக்கவும். இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவை மிகுந்த திகட்டாத தேங்காய் சாதம் ரெடி. இதற்கு வெள்ளை சுண்டல் குருமா வைத்தோ, அல்லது மட்டன் குழம்பு வைத்தோ பரிமாறினால் சுவையாக இருக்கும்
Write Comment |
||||




