அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சுவையான இனிப்பு பொங்கல்
Saturday, 12 January 2008
தமிழர்களின் தனிச் சிறப்பு வாய்ந்த தைப் பொங்கல் வந்து விட்டது. சுவையாக இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி        :    அரை டம்ளர்
பாசி பரிப்பு    :    கால் டம்ளர் ( லேசாக வருத்தது)
வெல்லம்    :    அரை கிலோ
முந்திரி பருப்பு    :    ஐந்து
கிஸ்மிஸ் பழம்    :    ஐந்து
உப்பு        :    தேவையான அளவு
ஏலக்காய்    :    இரண்டு
 
செய்முறை

பச்சரியை நன்றாக களைந்து அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன்  உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரிசி பாதி வெந்ததும் அதனுடன் வெல்லத்தையும், ஏலக்காயையும் சேர்த்து நன்றாக கிண்டவும்.

இப்போது சிறிது நேரம் குக்கரில் வைத்து விடவும். இதற்கிடையே, கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை நெய்யில்  வறுத்து கொதிக்கும் அரிசியில் போடவும்.

பொங்கல் நன்றாக வெந்தவுடன் இறக்கி மேலும் சிறிது நெய் வார்த்தால் சுவையான பொங்கல் ரெடி.  

வெல்லத்திற்குப் பதிலாக சிறிது சர்க்கரை, தேன் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code