| வெங்காய குழம்பு |
| Tuesday, 22 January 2008 | ||||
தேவையானப் பொருட்கள்![]() வெங்காயம் - கால்கிலோ (சிறியது) பூண்டு - 10 பல் புளி- ஒரு எழுமிச்சை அளவு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - சிறிது உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - சிறிது மஞ்சள்தூள்- சிறிது மசாலாதூள் - 2 தேக்கரண்டி செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல், பூண்டை நன்கு தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணைய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்க வேண்டும், கடுகு வெடித்ததும் அதனுடன் வெங்காயம், கருவேப்பில்லை, பூண்டு இவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் இளஞ்சிவப்பாக ஆனதும், இதில் புளிக்கரைசலை ஊற்றி தேவையான உப்பைச் சேர்க்க வேண்டும். இதனுடன் மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிதமான தீயில் எண்ணைய் கொதித்து குழம்பு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
Write Comment |
||||




