| எலுமிச்சை ரசம் |
| Wednesday, 30 January 2008 | ||||
|
ரச வகைகளில் ஏராளம் உண்டு. அதில் பார்க்கப்போவது எலுமிச்சை ரசம். தேவையான பொருட்கள் ![]() எலுமிச்சை : 1 தக்காளி : 2 சீரகம் : ஒரு டீஸ்பூன் மிளகு : 1 ஸ்பூன் பூண்டு : 2 பல் மிளகாய் வற்றல் : 2 கொத்தமல்லி இலை : தேவையான அளவு கொஞ்சம் சமையல் எண்ணைய். செய்முறை : அரை லிட்டர் தண்ணீரில் இரண்டு தக்காளியை போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இதே நீரில் மிளகு, சீரகம், பூண்டு இவற்றை நன்கு தட்டிப் போடவும். இப்போது, அடுப்பில் வானலியை வைத்து அதில் சிறிது எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்க வேண்டும். இதன் மீது அந்த தண்ணீர்க் கலவையை ஊற்ற வேண்டும். இதனுடன் தேவையான புளிப்புச் சுவைக்கு ஏற்ப எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, கலவையை சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். ரசம் லேசாக கொதித்து நுரை வரும் போது, அதன் மீது கொத்தமல்லி இலைகளை லேசாக கிள்ளி போட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான எலுமிச்சை ரசம் ரெடி.
Write Comment |
||||




