அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மிளகு சாதம்
Thursday, 14 February 2008
 உடல் சளிக்கு மிளகு மிகவும் நல்லது. அந்த மிளகை வைத்து சாதம் செய்வது எப்படி என்று இங்கு காண்போம்.

தேவையானப் பொருட்கள்

சின்ன வெங்காயம் (25) : பொடியாக நறுக்கியது
மிளகு பொடி :  1 ஸ்பூன்
உப்பு  :  தேவையான அளவு
நெய்  :  2 ஸ்பூன்
சாதம் : 1 கப்
பச்சை மிளகாய் : ஒன்று அல்லது இரண்டு
கறிவேப்பில்லை, கடுகு : தேவையான அளவு

செய்முறை

வானலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் சீக்கிரமே வதங்கி விடும்.
இதனுடன் கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து போட்டு தாளித்து, அதனுடன் மிளகுப் பொடியைத் தூவி நன்றாக பிரட்ட வேண்டும்.

இப்போது, இதனுடன் ஒரு கப் சாதத்தையும் போட்டு நன்றாக கிளறவும். மிளகுப் பொடி கலவை, சாதத்துடன் நன்றாக கலந்தவுடன் இக்கலைவையை இறக்கிப் பரிமாறவும்.








Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code