|
குழிப் பணியாரம் செய்யலாமா...?
|
|
Wednesday, 20 February 2008 |
உணவகங்களில் பெரிதும் விரும்பி வாங்கி உண்ணும் குழிப்பணியாரத்தை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி : ஒரு கப் உளுத்தம் பருப்பு : 1 ஸ்பூன் தேங்காய் : ஒரு மூடி வெந்தயம் : சிறிது உப்பு : தேவையான அளவு கடலைப் பருப்பு : கால் கிலோ பச்சை மிளகாய் : மூன்று அல்லது நான்கு சமையல் எண்ணைய் 250 மிலி., வெங்காயம் : சிறிது
செய்முறை :
அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து இரவு ஆட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி லேசாக சூடானதும் அதில் கடலைப் பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொத்தமல்லி, கருவேப்பில்லையும் சிறிது போட்டுக் கொள்ளலாம். கலவை இளஞ்சிவப்பாக மாறியவுடன் அதனை அப்படியே ஆட்டி வைத்த மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
இப்போது மாவை நன்கு கிண்டிவிட்டு, குழிப்பணியார சட்டியில் ஊற்றவும். சிறிது நேரத்தில் சூடான, சுவையான பணியாரம் ரெடி.
இந்த பணியாரத்திற்கு தேங்காய் துவையல் அல்லது சாம்பார் ஆகியவற்றைச் செய்து தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
|