| கிச்சன் டிப்ஸ்... |
| Tuesday, 04 March 2008 | ||||
பச்சை மிளகாய் விரைவில் அழுகி விடுகிறது. எண்ணைய் ஊற்றி சமைக்கும் போது விரைவில் கரை படிந்து விடுகிறது என்ற வருத்தப்படுபவர்களா நீங்கள். உங்களுக்காகவே, சமையலறை குறிப்புகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். உங்கள் அன்றாட பிரச்சனையில் இருந்து இனி உங்களுக்கு விடுதலைதான்.1. பச்சை மிளகாயை பிரஷ்ஷாக பயன்படுத்த, அதன் காம்பினை பிய்த்து விட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் பிரஷ்ஷாக இருக்கும். 2. காளான்களை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கக் கூடாது. ஏனென்றால், அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும். 3. பாத்திரங்களிலோ, உடையிலோ, எண்ணைய் கறை ஏற்பட்டு விட்டால் அதனை நீக்குவதற்கு எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, அவற்றை உப்பில் ஊற விட்டு பின்னர் அதனை எடுத்து கறை உள்ள இடத்தில் தேய்த்தால் கறை மாயமாகிவிடும். 4. பால் பொங்கும் போது அதை கட்டுப்படுத்த முடியவில்லையெனில், சிரமப்படவே வேண்டாம். பொங்கும் போது சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளித்துப் பாருங்கள். 5. பால் காய்ச்சப் போகிறீர்களா? முதலில் பால் காய்ச்சப் போகும் பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்து விட்டு பாலைக் காய்ச்சினால் அப்பாத்திரம் விரைவில் அடி பிடிக்காது. 6. வீட்டில் முட்டையை கொதிக்க வைக்கும் போது சில நேரங்கள், அதன் ஓடு வெடித்து முட்டையின் உள் இருப்பவை வெளியே வந்து விடும். இதனைத் தவிர்க்க முட்டை கொதிக்கும் தண்ணீரில் சிறிது வினிகரை விட வேண்டும். இப்படிச் செய்யும் போது, முட்டையின் ஓடு உடைந்தாலும் அதன் உள் இருப்பவை வெளியே வராது. 7. வாங்கி வைத்திருக்கும் முட்டை கெட்டு விட்டதா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கு குளிர்ந்த உப்புத் தண்ணீரில் முட்டையை போட்டால், அது மூழ்கினால் நல்ல முட்டை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை மிதந்தால் அதனை தூக்கி எறிந்து விடலாம். 8. வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் நீர் வராமல் இருக்க, வெங்காயத்தை உரிப்பதற்கு முன் தண்ணீரில் நனைத்து விட்டு உரிக்கலாம். அல்லது பிரிட்ஜில் பிரீசரில் வைத்து எடுத்து உரிக்கலாம். 9. உருளைக் கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கலாம். 10. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 11. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ப்ரிட்ஜில் அதை வைக்கவும். 12. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.
Write Comment |
||||

பச்சை மிளகாய் விரைவில் அழுகி விடுகிறது. எண்ணைய் ஊற்றி சமைக்கும் போது விரைவில் கரை படிந்து விடுகிறது என்ற வருத்தப்படுபவர்களா நீங்கள். உங்களுக்காகவே, சமையலறை குறிப்புகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். உங்கள் அன்றாட பிரச்சனையில் இருந்து இனி உங்களுக்கு விடுதலைதான்.

