'டிவி' நேரடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி 'வாந்தி' |
| Wednesday, 19 December 2007 | ||||
|
நேரலையில் ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திடீரென வாந்தி எடுத்தால் எப்படி இருக்கும். அதிர்ச்சியாக இருக்கிறதா...ஆம்! அப்படி ஒரு சம்பவம் சுவீடன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அரங்கேறியுள்ளது. எவா நசீம்சன் என்ற டிவி தொகுபாளினி, நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நேயர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நசீம்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒளிபரப்பு அரங்கத்திலே வாந்தி எடுத்தார். இது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நசீம்சன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினாராம்!
Write Comment |
||||




