|
ஹூ ஜின்டாவோ மீண்டும் தேர்வு 
பீஜிங் : சீன அதிபராக ஹூ ஜின்டாவோ மீண்டும் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் ஏகமனதாக அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார்.
சீனாவின் ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜீ ஜின்பிங் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரப்ஜித் சிங்கின் மரணதண்டனை தள்ளிவைப்பு சரப்ஜித் சிங்கின் மரணதண்டனையை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை பார்லிமென்ட்டில் மத்திய அரசு நேற்று அறிவித்தது.
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற பாக். மனித உரிமை விவகாரத் துறை பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் சரப்ஜ்த் சிங்குக்கு வரும் 1ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகின. அவரை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தது. இப்பிரச்சனை கடந்த இரண்டுதினங்களாக பார்லிமென்ட்டில் எதிரொலித்தது.
இதனிடையே சரப்ஜித் சிங்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அதிபர் முஷாரப் உத்தரவிட்டார்.
சரப்ஜித் சிங் குடும்பத்தினர் நிம்மதி: இப்போதைக்கு சற்றே மன நிம்மதி ஏற்பட்டுள்ளது. கணவர் வீடு திரும்பினால் தான் மீண்டும் சந்தோஷம் ஏற்படும். கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என சரப்ஜித் சிங் மனைவி கூறினார்.
பாக. பிரமராக கிலானி பதவியேற்பு
பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் புறக்கணித்துவிட்டனர். இவர்களது கட்சிகள்தான் கூட்டாக இந்த அரசை அமைத்து கிலானியை பிரதமராக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடந்த நாடாளுமன்றத் தலைவருக்கான தேர்தலில் அவர் முஷாரப் ஆதரவு வேட்பாளரான பர்வேஸ் இலாஹியை படுதோல்வி அடையச் செய்தார் கிலானி.
பாகிஸ்தான் மக்கள் கட்சி - நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணியின் சார்பில் கிலானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பர்வேஸ் இலாஹி நிறுத்தப்பட்டார்.
நேற்று நாடாளுமன்றத் தலைவரை (பிரதமர்) தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில் கிலானிக்கு 264 வாக்குகள் கிடைத்தன. இலாஹிக்கு வெறும் 42 ஓட்டுக்களே கிடைத்தன.
இதையடுத்து கிலானி நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் பஹ்மிதா மிர்ஸா முறைப்படி அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அதிபர் முஷாரப்புக்கும் அவர் அதிகாரப்பூர்வ தகவலை அனுப்பி வைத்தார்.
கிலானி வெற்றி பெற்றதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் நாடு முழுவதும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் பெனாசிர் வாழ்க என்று கோஷமிட்டும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
நேற்று கிலானி பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி பதவியேற்றார். அவருக்கு அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானின் 15வது பிரதமர் கிலானி என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்கோரிக்கையை ஏற்க சீனா மறுப்பு தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று சீன அதிபர் ஜிடாவோவை அமெரிக்க ஜனாதிபதி புஷ் கேட்டுக்கொண்டார். அவர் டெலிபோன் செய்து இதை தெரிவித்தார். இந்த கோரிக்கையை சீனா ஏற்க மறுத்து விட்டது. தலாய்லாமா தனி நாடு கோரிக்கையை கைவிட்டு வன்முறைக்கு முடிவு கட்டினால் மட்டுமே அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சீனா அறிவித்தது.
தனிநாடு கேட்பதாக சீனா கோருவது தவறு என்று தலாய்லாமா கூறினார். நாங்கள் அர்த்தமுள்ள சுயாட்சி தேவை என்று தான் கேரி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் பிரான்சு அதிபரை தொடர்ந்து செக் குடியரசு அதிபர் வக்ளவ் கிளாஸ் சும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறார்.
முக்கிய நகரங்கள் இருளில் மூழ்குகிறது உலகம் நாளுக்கு நாள் வெப்பமயமாகி வருகிறது. பருவ நிலை மாற்றங்களும் ஏற்படுகிறது. இந்த வெப்பமயம் பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுச் சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 371க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று (29-03-2008) 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு 8 மணி முதல் 1 மணி நேரம் மின்சாரத்தை நிறுத்த பல்வேறு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
சிட்னி பாங்காக் லண்டன் சிகாகோ உள்பட ஏராளமான நகரங்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றன. சில நகரங்களில் ஏற்கனவே 1 மணி நேரம் மின்சாரம் இன்றி இருட்டடிப்பு நிகழ்ச்சி தொடங்கி விட்டது. எர்த் ஹவர் என்று இதற்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. 1 மணி நேரம் மின்சாரம் இன்றி நகரம் இருளில் மூழ்கியது. அது மட்டுமல்ல மின்சாரத்தை பயன்படுத்தாமல் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது.
|