அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்ற வார உலகம்: 05-04-08
Saturday, 05 April 2008
தொகுப்புக்கள் உள்ளடக்கம்
சென்ற வார உலகம்: 05-04-08
பக்கம் 2

ஜனாதிபதி தேர்தல் - விலக மாட்டேன்

 

 அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் ஜான் மெக்கைன் என்பது முடிவாகி விட்டது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டி கடுமையாக இருப்பதால் இன்னும் தெளிவான முடிவு தெரியவில்லை.

ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய ஒபாமாவுக்கு 1623 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்து உள்ளது. ஹிலாரிக்கு 1499 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்து உள்ளது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமனம் பெற 2024 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்க வேண்டும். ஆனால் போட்டியில் இருக்கும் 2 வேட்பாளர்களில் யாருக்கும் இந்த அளவு ஆதரவு கிடைக்காது என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாநில வாரியாக கட்சி அளவில் நடக்கும் தேர்தல்களில் ஒபாமாவுக்கே தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. ஹிலாரி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார். இதனால் ஒபாமாவின் ஆதரவாளர்கள் அவரை போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர். போட்டியில் இருப்பதன் மூலம் ஹிலாரி குடியரசு கட்சி வெட்பாளருக்கு உதவி செய்கிறார் என்று செனட்டரும் ஒபாமாவின் ஆதரவாளருமான பேட்ரிக் லீகி கூறி இருக்கிறார்.

இந்த கோரிக்கையை ஏற்க ஹிலாரி மறுத்து விட்டார்.

அவர் தன் ஆதரவாளர்களிடம் கூறுகையில் போட்டியில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இடியானபோலிஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:

போட்டியை நிறுத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். தங்கள் குரலை வெளிப்படுத்த ஒவ்வெருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்பது தான் எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்கர்கள் அறிவார்கள். எனவே நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன்.

இவ்வாறு ஹிலாரி கூறினார்.

 

 

 

மலேசிய பிரதமர் படாவிக்கு புதியநெருக்கடி

 

 கோலாலம்பூர்: மார்ச் 8ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்த நிலையில் பிரதமர் படாவி தலைமையிலான கூட்டணி இதில் வெற்றி பெற்றது. ஆனால் முன்பைபோல பெரும்பான்மையான இடங்களை இக்கூட்டணி கைப்பற்ற முடியவில்லை. மாறாக மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் பல இடங்களை கைப்பற்றி தங்கள் பலத்தை அதிகரித்து கொண்டுள்ளன.

மலேசியாவில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான இஸ்லாமிய கட்சி சீன மக்களின் பிரதிநிதியாக செயல்படும் ஜனநாயக நடவடிக்கை கட்சி நீதிக்கட்சி ஆகியவையே முக்கியமான எதிர்க்கட்சிகள். தற்போது இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஓர் அணியில் திரண்டுள்ளன. ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவது என்று இக்கட்சியின் தலைவர்கள் நேற்று முடிவு செய்தனர். இஸ்லாமிய நாடு கோரிக்கை குறித்து கூட்டணி கட்சிகளிடம் பேசி பின்னர் முடிவு செய்யப்படும் என அன்வர் தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் அதிருப்தி:  ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கழகத்தில் பிரதமர் படாவிக்கு எதிராக அதிருப்தி அலை எழுந்துள்ளது. அவர் மீது அதிருப்தியில் உள்ள 500 பேர் கோலாலம்பூரில் உள்ள ஓட்டலில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இதில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அவரது மகனும் எம்.பி.யுமான முக்ரிஷ் மகாதிர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் பதவியில் இருந்து படாவி விலக வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

முஷரப்புக்கு எதிராக போர்க்கொடி

 

 பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருந்த போது அதிபர் முஷாரப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதல்ல எனவும் அவற்றுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் இன்னும் வழங்கவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அவசர நிலை அமலில் இருந்த போது அதிபர் முஷாரப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதல்ல.

அவற்றுக்கு பார்லிமென்ட் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் முஷாரப்புடன் மோத புதிய அரசு தயாராவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. பாக். சட்ட அமைச்சர் பரூக் நயீக் கூறுகையில்

அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய தனிப்பட்ட நபர் எவருக்கும் அதிகாரம் கிடையாது. பார்லிமென்ட்டில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன்தான் அரசியல் சட்டத்தைத் திருத்த முடியும். முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளையும் 30 நாட்களுக்குள் மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.

 

 

 

திபெத் போராட்டம்: 8 பேர் பலி

 

 திபெத்தை தன் மாகாண பகுதிகளில் ஒன்றாக மாற்ற அது பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக திபெத் நாட்டுக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சீனராணுவம் அடக்கியபடி உள்ளது. கடந்த மாதம் 14ந் தேதி திபெத்தில் உள்ள லசா பகுதியில் வெடித்த பயங்கர கலவரத்தில் 15 பேர் பலியானார்கள்.

இதற்கு உலகின் பல நாடுகள் சீனாவை கண்டித்தன. இதையடுத்து பிஜீங்கில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை சீர் குலைக்க திபெத் புத்த மத குருக்கள் கலவரத்தை தூண்டி விடுவதாக சீனா கூறியது.

இந்த நிலையில் திபெத்தில் உள்ள டுன்கோர் எனும் நகரில் போராட்டம் நடந்தது. அது கலவரமாக மாறியது. அப்போது சீன ராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் 8 பேர் குண்டு பாய்ந்து பலியானதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதை சீன போலீசார் மறுத்துள்ளனர்.

 




Comments (6)
RSS comments
08-09-2008 03:00
[URL=http://iosflvsj.com]fphtxzif[/URL] rxqmlyrt usfgmdrz http://ddrnlshl.com bpcjntvw nptmssqs
Written by vlmnveid (Guest)
08-09-2008 03:02
[URL=http://tawdxcjd.com]mzngfjkk[/URL] nservgni http://qmuxaawt.com qdgzoobf zjdlxsji rjmmqxjs
Written by dxlyrrjl (Guest)
08-09-2008 03:03
[URL=http://bouwuvbe.com]yqbfvnfe[/URL] eejojvsa http://yjqncbxh.com lrsitogr kjlsxicd qhrjpzhp
Written by rltlddrm (Guest)
08-09-2008 03:05
[URL=http://kslgoqip.com]pnoppxco[/URL] aeeoshez http://ngraoqyu.com cwolujvj bovyaclx vbylovap
Written by fbuohdos (Guest)
08-09-2008 03:07
xrqgtpea [URL=http://lbgmskun.com]sbkgaywt[/URL] jtlakuhz http://qchwyigi.com gnccnnda lmjzlzkz
Written by potxcrga (Guest)