|
திபெத்தியர்கள் மீது துப்பாக்கி சூடு திபெத்தியர்கள் மீது சீனா அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. இதை எதிர்த்து திபெத் தலைநகரமான லாசா மற்றும் பல்வேறு இடங்களில் கலவரம் முண்டது. போலீசார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 10க்கும் மேற்பட்ட திபெத் மக்கள் பலியானார்கள்.
இந்த நிலையில் சிஜுன் என்ற இடத்தில் திபெத் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலாய்லாமாவை மீண்டும் திபெத்துக்கு வரவழைக்க வேண்டும். திபெத் மக்கள் மீது அடக்கு முறையை கைவிடவேண்டும் என்று வற்புறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஒலிம்பிக் தீபம்: பாரீசில் பரபரப்பு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகரான பீஜிங்கில் ஆகஸ்ட் 8ந் தேதி தொடங்கவிருக்கிறது. ஒலிம்பிக் தீபம் பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பு சீனா திரும்புகிறது.
இந்த ஒலிம்பிக் ஜோதி பயணம் தொடங்கியதும் எதிர்ப்பும் ஒன்று சேர்ந்து கிளம்பி விட்டது. தனிநாடு கோரி வரும் திபெத்தியர்கள் ஒலிம்பிக் போட்டி சீனாவில் நடைபெற எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
லண்டனில் ஒலிம்பிக் தீபம் ஓட்டம் நடந்த போது திபெத் ஆதரவாளர்கள் அதனை தடுக்க நினைத்தார்கள். ஆனால் ஒலிம்பிக் தீபம் ஓட்டம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் ஒலிம்பிக் ஓட்டம் பாரீசில் நேற்று நடந்தது. திபெத்திய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒலிம்பிக் தீபத்தை தடுக்க முயற்சித்தனர். பிரச்சனையின் போது இரண்டொரு முறை ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் தொழில்நுட்ப பிரச்சனையால் தீபம் அணைக்கப்பட்டதாக கூறினர். ஆனால் பாதுகாப்பு காரணமாக அணைக்கப்பட்டது என்று ஒலிம்பிக் கமிட்டியினர் கருத்து கூறியுள்ளனர்.
சீனா ஒலிம்பிக்போட்டி தொடக்கவிழா: புஷ் திபெத் மாநிலத்தில் ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. உலக நாடுகள் சீனாவின் இந்த நிலையை கண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். திபெத்தில் சீனாவின் ஒடுக்கு முறையை கையாள்வதை எதிர்த்து அந்த நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் புஷ் கலந்து கொள்ளக்கூடாது என்று ஹிலாரி கிளிண்டன் உட்பட ஜனநாயக கட்சி தலைவர்கள் கோரினார்கள்.
இதை ஏற்க மறுத்த புஷ் சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்வேன் என்று அறிவித்தார்.
அமெரிக்காவிற்கு சீனா கண்டனம் திபெத் போராட்டத்தை அடக்குமுறையால் அடக்க முயலும் சீன அரசைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் நான்சி பலோசி கொண்டு வந்தார் தீர்மானத்திற்கு ஆதரவாக 413 பேரும் எதிர்த்து ஒருவரும் வாக்களித்தனர்.
சீன அரசின் கொள்கைகளும் சட்டங்களும் தங்களது மொழி கலாச்சாரம் மத அடையாளம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக திபெத்தியர்கள் கருதுகிறார்கள். கவலைப்படுகிறார்கள்.
ஆனால் இதை சீன அரசு கவனத்தில் கொள்ள மறுக்கிறது. இதைவிட மோசமாக ஒலிம்பிக் ஜோதியை திபெத் வழியாக கொண்டு செல்லவும் அது முயலுகிறது. இதை உலக சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
திபெத்தியர்களின் போராட்டத்தை வன்முறையால் அடக்க முயலுவதை சீன அரசு நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறுகையில் திபெத்தில் அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை தெடங்க விரும்புகிறது. இதன் மூலம் திபெத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இதனிடையே இன்று சீனாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு செயலக செய்தி தொடர்பாளர் இது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என கூறினார்.
கூட்டணி ஆட்சி: நேபாள மாவோயிஸ்டுகள் அறிவிப்பு நேபாளத்தில் நேற்று 4வது நாடாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட இருக்கும் மொத்த இடங்கள் 240ல் 180 தொகுதிகளுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 101 இடங்களை கைபற்றியிருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர்களின் ஒருவரான பாபுராம் பட்டராய் அடுத்து நாங்கள் தான் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அறிவித்தார்.
இந்த தேர்தல் மூலம் மாவோயிஸ்டு கட்சி தான் மிகப்பெரிய கட்சி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த ஆட்சியை கூட்டணிகளுடன் சேர்ந்து நாங்கள் தான் அமைப்போம். கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்படும்.
நிர்வாகத்துக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்துவோம். சர்வதேச சமுதாயத்துடன் நல்ல உறவை ஏற்படுத்துவோம்.
இந்த தேர்தல் மூலம் தேசத்தின் முகத்தை மாற்றவேண்டும் என்று நேபாள மக்கள் விரும்பினார்கள். எனவே அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரிய எங்களை மக்கள் தேர்ந்து எடுத்தனர்.
|