| சென்ற வார உலகம்: 21-06-08 |
| Saturday, 21 June 2008 | ||||
ஜப்பானில் நிலநடுக்கம்: 2 பேர் பலிமீண்டும் கடந்த வாரம் கடந்த வாரம் ஜப்பானில் வடக்கு பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் பதிவானது. ஜப்பான் நாட்டில் சுனாமி நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டுவருகிறது. இங்கு சென்டாய் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. 30 வினாடிகள் இது நீடித்தது. நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி பீதியில் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். பீதியில் ரோடுகளில் ஓடிய சிலர் மீது வாகனங்கள் மோதியது. சென்டாய் நகரில் நில நடுக்கத்தில் விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பஸ் கவிழ்ந்து அதில் உள்ள 4 பேர் காயமடைந்தனர். பூகம்பத்தால் வீடுகள் சேதமடைந்தும் கட்டிடத்தில் இருந்து குதித்து விழுந்ததினாலும் 2 பேர் பலியானார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து இந்த பகுதியில் அதிவேக புல்லெட் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள அணு ஆலைகளும் உடனடியாக மூடப்பட்டன. இதனால் பெரும் உயிரப்பு தவிர்க்கப்பட்டது. -- ஆப்கானிஸ்தான் அதிபர் பகிரங்க எச்சரிக்கைபாகிஸ்தான் தீவிரவாதகிள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குல் புகுந்து அவர்களை தாக்குவோம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் தீவிரவாதிகள் அங்கு முகாமிட்டுள்ள பன்னாட்டு படைகளின் மீது ஆப்கானிஸ்தான் எல்லை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பன்னாட்டு படைவீரர்களின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனிடையே பன்னாட்டு படையினரை வேட்டையாட ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாதிகளை அனுப்புவோம் என எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல் எல்லை தாண்டி சென்று பன்னாட்டு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தியதில் தவறுதலாக 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதனால் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அதிபர் எச்சரிக்கை பாகிஸ்தான் உள்ள தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து ஆப்கானிஸ்தான் படைகளையோ பன்னாட்டு படைகளையோ எதிர்த்து தாக்குதல் நடத்தினால் அவர்களை பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்த உரிமை உண்டு என்றார். -- புலிகள் தாக்குதலில் 12 போலீசார் பலிஇலங்கையில் வவுனியா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று விடுதலைப்புலகிள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பெண் போலீஸ் உட்பட 12 போலீசார் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். சூப்பிரண்டு அலுவலகம் இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இனப் பிரச்சனையில் உச்சகட்ட போர் வெடித்துள்ளது. கடல் வான் தரை என்று மூன்று வழிகளிலும் ராணுவம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுகிறது. இலங்கைக்கு வடக்கு பகுதியில் வவுனியாவில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை 7.10 மணி பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு செல்வதற்காக ஏராளமான போலீசார் குவிந்திருந்தனர். அப்போது அந்த அலுவலகத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்தார். உடனே பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்தபோது அந்த அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு இல்லை. இதில் மூன்று பெண் போலீசார் உட்பட 12 போலீசார் பலியாகினர். 19 போலீசார் படுகாயம் அடைந்தனர். -- செவ்வாயில் பனிக்கட்டியா? உப்பா?செவ்வாய் கிரகத்தில் இருந்து பீனிக்ஸ் விண்கலம் அனுப்பிய படத்தில் வெள்ளையாக ஒரு பொருள் தோன்றுவதால் அது பனிக்கட்டியா? அல்லது உப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்டகாலமாக செவ்வாயில் தண்ணீர் இருப்பதாகவும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாகவும் நம்பப்பட்டுவருகிறது. இதனியையே செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக பீனிக்ஸ் என்ற விண்கலத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பி உள்ளனர். கடந்த மாதம் அது செவ்வாய் கிரகத்தை அடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பறப்பை தோனண்டி ஆய்வு நடத்தி வருகிறது. இதனிடையே அந்த விண்கலத்தில் உள்ள நீண்ட கைகளைக் கொண்ட ரோபாட் செவவாய் கிரகத்தின் மேற்பரப்பை தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து வருகிறது. துருவப்பகுதியில்தான் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கும் வாய்ப்பு இருப்பதால் அங்குதான் பீனிக்ஸ் விண்கலம் மண்ணை தோண்டி எடுத்தது. ஏற்கனவே இரண்டு இடங்களில் மண் எடுக்கப்பட்டது. அவ்வாறு ரோபாட் 3 அங்குலம் ஆழத்துக்கு மண்ணை எடுத்தபோது சிவப்பு புழுதிக்கு கீழே வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் காணப்படுகிறது. எனவே அது உறைநிலை பனிக்கட்டி அல்லது உப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பொருளை 1800 டிகிரி வெப்பநிலையில் சூடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே அது என்ன பொரள் என்பது தெரியவரும். செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதியில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை ஆராய்வதுதான் பீனிக்ஸ் விண்கலத்தின் முக்கிய குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. -- இலங்கையில் சார்க் மாநாடுஇலங்கை தலைநாக் கொழும்புவில் ஆகஸ்டு மாதம் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து இலங்கை சென்றனர்.
Write Comment |
||||




